காருனா இப்படி விற்பனையாகணும்.. இந்த கத்துகுட்டி பிராண்டு டாடாவை வீட்டுக்கு அனுப்பாம விடாது போலயே..

எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV), இந்த பெயரே இப்போது இந்தியா முழுக்க ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் காரின் பெயர் ஆகும். சியூவி ரக கார் மாடலே இதுவாகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் மற்றும் ஒரே சியூவி ரக கார் மாடலே இது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் மாடலே தற்போது விற்பனையில் மாபெரும் சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 20 ஆயிரம் யூனிட் விற்பனையை அந்த கார் மாடல் எட்டியிருக்கின்றது.

இது விற்பனைக்கு வந்து வெறும் ஆறு மாதங்களே ஆகின்றன. இதற்குள்ளாகவே இந்த மாபெரும் விற்பனைச் சாதனையை விண்ட்ஸர் இவி நாட்டில் படைத்திருக்கின்றது. இந்த மார் மாடல் இந்தியாவில் ரூ. 13.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Mg windsor achieves 20 000 sales milestone

இந்த விலையில் விற்கப்படுகின்ற போதும் அதற்கு நாட்டு மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. இந்த விண்ட்ஸர் இவி காரை ரூ. 9.99 லட்சத்திற்கும் வாங்கிக் கொள்ள முடியும். பேட்டரி அஸ் எ சர்வீஸ் எனும் திட்டத்தின்கீழ் வாங்கும்போதே இந்த விலையில் விண்ட்ஸர் இவியை வாங்கிக்க முடியும்.

ஆனால், இந்த திட்டத்தின்கீழ் காரை வாங்கும்போது ஒரு கிமீ பயணத்திற்கு ரூ. 3.9 கட்டணத்தை நிறுவனம் வழங்க வேண்டும். இது பேட்டரி பயன்பாட்டிற்கான கட்டணம் ஆகும். மேலும், ரூ. 9.99 லட்சம் பேட்டரி அல்லாமல் வெறும் காருக்கான விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

இப்போதைய நிலவரப்படி விண்ட்ஸர் இவி ஒரே ஒரு பேட்டரி பேக் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. 38 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் மட்டுமே விண்ட்ஸர் இவியில் வழங்கப்படுகின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 332 கிமீ ரேஞ்சைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேபோல், இதில் வழங்கப்பட்டு இருக்கும் மின்சார மோட்டார் 100 kW பவர் மற்றும் 200 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. திறனை வெளியேற்றுவதில் மட்டுமல்ல இந்த கார் ஆடம்பர மற்றும் பிரீமியம் அம்சங்களையும் மிக தாராளமாக தாங்கிய வாகனமாகக் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், விமானங்களில் வழங்கப்படுவதைப் போன்ற இருக்கை, பெரிய 15.6 இன்ச் டச் வசதிக் கொண்ட ஸ்கிரீன் மற்றும் பெரிய இட வசதிக் கொண்ட கேபின் உள்ளிட்ட வசதிகளையே இது தன்னுள் தாங்கியிருக்கின்றது. இதுமாதிரியான அம்சங்களின் காரணமாகவும், இந்தியாவின் முதல் சியூவி ரக கார் என்பதாலுமே இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் இந்தியாவில் கால்தடம் பதித்து 7 ஆண்டுகளுக்கும் குறைவான ஆண்டுகளே ஆகின்றன. இருப்பினும் அது டாடா மோட்டார்ஸ் ஆக்கிரமிப்பு செய்து வந்த இ-கார் மார்கெட்டை இது ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, விண்ட்ஸர் இவி-யாலேயே அது இந்த சாதனையைப் படைத்திருக்கின்றது.

மிக சிறப்பான வரவேற்பே இந்த கார் மாடலுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் மற்றும் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் இ-காராக இது காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்த கார் மாடலில் பெரிய பேட்டரி பேக் ஆப்ஷனை அறிமுகம் செய்ய எம்ஜி திட்டமிட்டு இருக்கின்றது. இது இந்த காருக்கு கிடைக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வாயிலாக டாடா மோட்டார்ஸுக்கு கூடுதல் தலைவலியை அது ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 11, 2025, 19:19 [IST]
English summary
Mg windsor becomes fastest electric vehicle to reach 20000 sales in india within six months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+