சீனாவின் பின்னணியில் செயல்படும் கம்பெனியின் காரை வாங்க துடிக்கும் இந்தியர்கள் - டாடாவை தேடி வருவது குறையுது

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-க்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் முக்கிய காரணமாக விளங்குகிறது. ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே டாடாவில் இருந்து பல்வேறு விதமான எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 1 வருடமாக எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் கை ஓங்கி வருகிறது. எந்த அளவிற்கு என்றால், எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸுக்கு கிட்டத்தட்ட இணையாக எம்ஜி மோட்டார் வந்துள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், டாடா மோட்டார்ஸில் இருந்து நெக்ஸான் இவி, பஞ்ச் இவி, டியாகோ இவி, டிகோர் இவி, கர்வ் இவி என பல்வேறு விதமான எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் டாடா நெக்ஸான் இவி மற்றும் பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை மட்டும் எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் உடன் ஒப்பிட்டு பார்க்கலாம், வாங்க.

mg beats tata electric cars

டாடாவை போன்று, எம்ஜி நிறுவனத்தில் இருந்தும் இசட்.எஸ் இவி, கோமெட் இவி, விண்ட்சர் இவி என 3 விதமான எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் குறிப்பாக எம்ஜியின் சமீபத்திய அறிமுகமான விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதற்கு காரணம், விண்ட்சர் இவி காரில் குத்தகை முறையில் பேட்டரியை எம்ஜி நிறுவனம் வழங்கி வருவதாகும். இதன் மூலமாக, இந்த எலக்ட்ரிக் காரின் விலையை எம்ஜி நிறுவனத்தால் குறைவாக நிர்ணயிக்க முடிவதால், விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2025 ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்து 450 விண்ட்சர் இவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

mg beats tata electric cars

அதுவே, கடந்த ஜனவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸில் இருந்து நெக்ஸான் இவி மற்றும் பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார்கள் முறையே 1,289 மற்றும் 1,189 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டையும் ஒன்று சேர்த்தால் கூட விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கையை முந்த முடியாது.

கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் முதல் மாதத்தில் 502 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டாலும், அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் குறைந்தது 3 ஆயிரம் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்களை ஆவது எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

mg beats tata electric cars

அதிகப்பட்சமாக கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் 3 ஆயிரத்து 785 விண்ட்சர் இவி கார்கள் விற்பனை செய்யப்பட்டன. மொத்தமாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி வரையில் இந்த 5 மாதங்களில் 13 ஆயிரத்து 997 விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதே 5 மாத காலத்தில் டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்கள் 7 ஆயிரத்து 47 யூனிட்களும், பஞ்ச் இவி 5 ஆயிரத்து 708 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த டாடா எலக்ட்ரிக் கார்களின் கடந்த 5 மாத மொத்த விற்பனை எண்ணிக்கை 12 ஆயிரத்து 755 ஆகும். இதனை காட்டிலும் எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்கள் சுமார் 1,242 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்வதில் இப்போதும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், இந்த நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்றே தோன்றுகிறது. அதாவது, இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடாவை எம்ஜி நிறுவனம் முந்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 11, 2025, 21:59 [IST]
English summary
Mg windsor ev beats tata nexon ev and punch ev electric cars in sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X