4 நாளில் கன்னியாகுமரி வந்து சேர்ந்தாச்சு... எலெக்ட்ரிக் கார் ஹைவே பயணத்துக்கு செட் ஆகாதுனு சொன்னா நம்பாதீங்க!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் லடாக் யூனியன் பிரதேசத்தின் லே முதல் இந்திய தென்முனையின் கன்னியாகுமரி வரையிலான சுமார் 3,757 கிலோமீட்டர் தூரத்தை விண்ட்சர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காரில் வெறும் 83 மணிநேரம் 43 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்ததாக அறிவித்துள்ளது.

இந்த தொலைத்தூர சவாலான பயணத்தை ஒரு எலெக்ட்ரிக் வாகனம் இவ்வளவு குறுகிய நேரத்தில் கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தச் சாதனை ஆனது இந்திய சாதனை புத்தகத்தாலும், ஆசிய சாதனை புத்தகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தை 'மவுண்டன் கோட்' (Mountain Goat) என்ற ஆர்வமுள்ள மோட்டார்ஸ்போர்ட் வல்லுநர்கள் குழு மேற்கொண்டது.

mg windsor ev electric car journey

லடாக்கின் உயரமான, கரடுமுரடான நிலப்பரப்பில் இருந்து தென்னிந்தியாவின் வெப்பமண்டல கடற்கரை வரை பல்வேறு வகையான நிலப்பரப்புகளைக் கடந்து, எம்ஜி வின்ட்சர் இவி தனது நம்பகத்தன்மையையும், ஈர்க்கக்கூடிய வரம்பையும், கடினமான சூழல்களிலும் சீரான செயல்திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த பயணத்தில் விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார் 20 முறை சார்ஜ் செய்யப்பட்டது.

பயணத்தின் போது தேவையான சார்ஜிங் மையங்களை, எம்ஜியின் 'இ-ஹப்' (e-Hub) செயலி மூலம் கண்டறியப்பட்டது. இந்த செயலி, 36 முன்னணி சார்ஜ்-பாயிண்ட் ஆபரேட்டர்களுடன் இணைந்து, இந்தியா முழுவதும் 13,000-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை ஒருங்கிணைக்கிறது. எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் மேம்பட்ட 52.9 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி, ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 449 கிமீ தூரத்திற்கு செல்லும் என சான்றளிக்கப்பட்டது.

mg windsor ev electric car journey

விண்ட்சர் இவி கார் ஃபாஸ்ட்-சார்ஜிங் (Fast-charging)-ஐ ஏற்பதுடன், இந்தியாவின் விரிவடைந்து வரும் நெடுஞ்சாலை சார்ஜிங் நெட்வொர்க் வழியாக முன்கூட்டிய ஓய்விற்கான நிறுத்தங்களை திட்டமிடுவதை சாத்தியமாக்குகிறது. அண்மையில், எம்ஜி விண்ட்சர் இவி 50,000 யூனிட்கள் விற்பனை மைல்கல்லை மிகக் குறுகிய காலத்தில் எட்டி, இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களிலேயே மிக வேகமாக இந்த சாதனையை நிகழ்த்தி புதிய சாதனை படைத்தது.

தற்போதைய லே- கன்னியாகுமரி வரையிலான சாதனை பயணம் குறித்து ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி வினய் ரெய்னா கூறுகையில், "லே முதல் கன்னியாகுமரி வரையிலான சவாலான பயணத்தை ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தில் சாதனை நேரத்தில் நிறைவு செய்தது, எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதும், அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மீதும் இந்தியாவின் வளர்ந்து வரும் நம்பிக்கைக்கு ஒரு வலுவான சான்றாகும்" என்றார்.

mg windsor ev electric car journey

2024 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, எம்ஜி வின்ட்சர் இவி இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக திகழ்கிறது. இது பாரம்பரிய பிரிவுகளைத் தாண்டி, எதிர்கால 'ஏரோக்ளைட்' (AeroGlide) வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த காரின் உட்புறத்தில், 135 டிகிரி சாய்வு வசதியுடன் கூடிய 'ஏரோ லவுஞ்ச்' இருக்கைகளுடன் பிஸ்னஸ்-கிளாஸ் இருக்கைகளுக்கு இணையான சவுகரியம் கிடைக்கிறது.

காருக்குள் டேஸ்போர்டில் பெரிய 15.6 அங்குல கிராண்ட்வியூ (GRANDVIEW) தொடுதிரை உடன் கார் ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. 2025 மே மாதத்தில், எம்ஜி நிறுவனம் புதிய விண்ட்சர் இவி புரோ காரை அறிமுகப்படுத்தி, விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார்களின் வரிசையை பலப்படுத்தியது.

mg windsor ev electric car journey

பெரியதான பேட்டரி பேக்குடன் விற்பனை செய்யப்படும் விண்ட்சர் இவி புரோ காரை தொடர்ந்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் அவரது இல்லத்தில், ஆண்டு விழா சிறப்புப் பதிப்பான எம்ஜி விண்ட்சர் இவி இன்ஸ்பயர் எடிசன் (Inspire Edition) கார் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட தூர பயணங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது சிரமம் போன்ற எதிர்மறையான கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியாவின் வளர்ந்து வரும் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்கட்டமைப்பை இந்த பயணத்தின் மூலம் எம்ஜி வெளிப்படுத்தி உள்ளது. இந்தச் சாதனை எம்ஜி நிறுவனத்தின் 'இவி சஹி ஹை' பிரச்சாரத்துடன் ஒத்துப்போகிறது. மேலும், சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சாதாரணமாகி வருகின்றன என்பதையும் இது குறிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 27, 2025, 21:08 [IST]
English summary
Mg windsor ev electric car completed the journey from leh to kanyakumari with 4 days
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X