டாடாவுக்கே தண்ணி காட்டுறது எல்லாம் பெரிய விஷயம்... பின்னால் இருந்து வேலை பார்க்கும் சீன நிறுவனம்!!

எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) எலக்ட்ரிக் கார் (Electric Car) இந்திய கார்கள் மார்க்கெட்டை புரட்டிப் போட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, அந்த அளவிற்கு இந்த எலக்ட்ரிக் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலக்ட்ரிக் காரை விற்பனையில் முந்தி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் வளர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக, அறிமுகத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு பெரியதாக மார்க்கெட் இல்லை என்பது என்னமோ உண்மை தான். இருப்பினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தொடர்ச்சியான முயற்சிகளின் மூலமாக எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. ஆனால், டாடா மோட்டார்ஸின் இந்த ஆதிக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்காது என்பது போலவே தெரிகிறது.

mg windsor ev sales

ஏனெனில், விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் மூலமாக இந்திய எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் புதிய புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.13.49 லட்சத்தில் எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் 3 மாதங்களிலேயே 10 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ட்சர் இவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விசாலமான இருக்கை அமைப்பு மற்றும் முழு ஆயுட்கால பேட்டரி உத்தரவாதம் உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள் ஆகும். இவை எல்லாவற்றையும் விட விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களிடம் கொண்டுப்போய் சேர்த்த விஷயம் என்றால், அது இந்த காரின் குறைவான விலை ஆகும். வெறும் ரூ.9.99 லட்சம் ஆனது விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

mg windsor ev sales

இந்த விலையில் பேட்டரி இல்லாமல் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் கிடைக்கும். பேட்டரியை குத்தகை முறையில் பெற்று பயன்படுத்த வேண்டியிருக்கும். அதாவது, சார்ஜ் காலியான பின் பேட்டரி உடன் கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறான பேட்டரி ஸ்வாப்பிங் முறை இந்தியர்களை கவருமா கவராதா என்கிற சந்தேகத்தில்தான் எம்ஜி மோட்டார் நிறுவனம் விண்ட்சர் இவி-ஐ அறிமுகம் செய்தது.

ஆனால், கடந்த 2 மாதங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார் எம்ஜி விண்ட்சர் இவி ஆகும். இதற்கு அடுத்தே டாடா நெக்ஸான் இவி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து டிசம்பர் வரையில் 3 மாதங்களில் சுமார் 10 ஆயிரத்து 45 விண்ட்சர் இவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த 3 மாதங்களில் எம்ஜி விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கையில் இது கிட்டத்தட்ட பாதி ஆகும்.

mg windsor ev sales

விண்ட்சர் இவி மட்டுமின்றி, எம்ஜி மோட்டாரின் மற்ற கோமெட் இவி (Comet EV) மற்றும் இசட்.எஸ் இவி (ZS EV) எலக்ட்ரிக் கார்களின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எம்ஜி மோட்டாரின் மொத்த விற்பனையில் இந்த எலக்ட்ரிக் கார்களின் பங்களிப்பு மட்டும் 70% ஆகும். அதாவது, இந்தியாவில் விற்பனையாகும் 3இல் 2 கார்கள் எலக்ட்ரிக் கார்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல்/ டீசல் கார்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் கார்களை களமிறக்கும் யோசனையை சில வருடங்களுக்கு முன்பே எம்ஜி செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது. அதன் மூலம் கிடைக்கும் பலன்களை தான் தற்போது அறுவடை செய்து வருகிறது. எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் தற்சமயம் 2வது இடத்தில் எம்ஜி மோட்டார் இருந்தாலும், டாடா மோட்டார்ஸை முந்தி முதலிடத்தை பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, January 9, 2025, 8:00 [IST]
English summary
Mg windsor ev electric car sales crossed 10000 in just 3 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X