இந்த காரின் விலையை திடீரென உயர்த்திய எம்ஜி! விற்பனை குறையுமா?

எம்ஜி நிறுவனம் தனது விண்ட்ஸர் இவி காரின் விலையை கணிசமாக அதிகரித்தள்ளது. இந்த விலை உயர்வை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் இந்த காரை தற்போது நீங்கள் வாங்க வேண்டும் என நினைத்தால் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். இப்படியாக எம்ஜி விண்ட்ஸர் காரின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விண்ட்ஸர் என்ற இவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் முதன் முறையாக அறிமுகமாகும் போது வித்தியாசமான காராக அறிமுகமானது வழக்கமாக இந்த காரை விலை கொடுத்து வாங்கும் ஆப்ஷன் மட்டுமல்லாமல் இந்த காரை நீங்கள் தேவைப்பட்டால் பேட்டரியை லீஸ் முறையிலும் வாங்கிக்கொள்ள முடியும்.

MG Windsor EV

இந்நிலையில் இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலைில் இந்த காரின் விலையை உயர்த்தி எம்ஜி நிறவனம் அறிவித்துள்ளது. இந்த காரின் டாப் வேரியன்ட் காரான எஸென்ஸ் ப்ரோ என்ற வேரியன்ட் காரின் விலையை ரூ21,200 என்ற விலையில் உயர்த்தியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது இந்த இந்த காரை வாங்க வேண்டும் என்றால் அதன் விலை ரூ18.31 லட்சம் தான்.

இந்த காரின் மற்ற வேரியன்ட்களில் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது எம்ஜி விண்ட்ஸர் இவி கார் ரூ14 லட்சம் முதல் ரூ18.31 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 3 விதமான வேரியன்ட்களில் எக்ஸைட், எக்ஸ்க்ளூஸிவ், எசென்ஸ், ஆகிய வேரியன்ட்கள் உள்ளன. இதில் எக்ஸ்க்ளூஸிவ் மற்றும் எசென்ஸ் ஆகிய வேரியன்ட்களில் ப்ரோ ஆப்ஷனும் இருக்கிறது.

MG Windsor EV

இந்த காரில் 2 விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. டாப் வேரியன்டில் 52.9kWh மற்றும் பேஸ் வேரயின்டில் 38kWh என்ற ஆப்ஷன்கள் உள்ளது. கூடுதலாக இந்த காரில் லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம், வெஹிகிள் டூ லோடு மற்றும் வெஹிகிள் டூ வெஹிகிள் அம்சங்கள், பவர்டு டெயில்கேட், புதிய அலாய் வீல்கள், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்டுகள், உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இதில் பெரிய பேட்டரி பேக் சார்ஜ் ஏற 9.5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதற்கு 7.4kw ஏனசி சார்ஜர் பயன்படுத்தப்படுகிறது. இது 20 -80 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் வெறும் 50 நிமிடத்தை தான் எடுத்து கொள்கிறது. இந்த கார் எக்கோ+, எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய டிரைவ்மோடு ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

MG Windsor EV

இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் கி.மீ வரம்பு இல்லாத வாழ்நாள் வாரண்டியை முதல் ஹேண்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் இந்நிறுவனத்தின் பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை இந்த கார் ஒனர்கள் ஒராண்டிற்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று விற்பனையாகி வருகிறது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வரும் நிலையில் இந்த காரை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் டாப் வேரியன்டில் மட்டுமே விலை உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இது விற்பனையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2025, 16:30 [IST]
English summary
Mg windsor ev price hike in india know full details
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X