400கிமீ-க்கு சார்ஜை பற்றி யோசிக்கவே வேண்டாம்... 12.50 லட்ச ரூபாயில் இவ்வளவு பெரிய எலக்ட்ரிக் கார் கிடைக்குதா?
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்பு மத்தியில் புதிய விண்ட்சர் இவி புரோ (Windsor EV Pro) எலக்ட்ரிக் கார் (Electric Car) மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஏற்கனவே சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய புரோ வேரியண்ட் ஆக அறிவிக்கப்படி இன்று (மே 6) விண்ட்சர் இவி புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எம்ஜி விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் என்றால், சமீப காலமாக இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் பெரியதாகி கொண்டே வருவதற்கு பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டில் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. BaaS என்கிற பேட்டரியை குத்தகை முறையில் விண்ட்சர் இவி காரில் எம்ஜி நிறுவனம் வழங்கியதால், இந்த எலக்ட்ரிக் காரை பலரும் போட்டி போட்டு வாங்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில்தான், விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வாங்குவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக, புதியதாக விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.17.49 லட்சமாக எம்ஜி மோட்டார் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த விலையில் பேட்டரி உடன் விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் கார் கிடைக்கும்.

அதுவே, பேட்டரி இல்லாமல் BaaS வசதி உடன் வாங்கினால் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.49 லட்சம் ஆகும். இதேபோன்று, பேட்டரி உடன் மற்றும் பேட்டரி இல்லாமல் என இரு விதமான ஆப்ஷன்களில் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டாக புதிய விண்ட்சர் இவி புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
BaaS முறையில் வாங்கும்போது, எந்த அளவிற்கான பேட்டரி சார்ஜை பயன்படுத்தி உள்ளோம் என்பதை பொறுத்து கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். தற்போதைக்கு இந்த கட்டணங்கள் மிகவும் குறைவாக உள்ளதால், இவ்வாறான வழியில் காரை வாங்கி பயன்படுத்தலாம் என்பது பலரது யோசனையாக உள்ளது. மேலும், இவ்வாறான முறையில் சார்ஜிங் நேரமும் முற்றிலுமாக தவிர்க்கப்படுவதால், BaaS முறையில் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை பயன்படுத்துவதும் பலருக்கு சரியான யோசனையாக தோன்றுகிறது.
புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் வருகிற மே 8ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட உள்ளன. இந்த புதிய காரில் 52.9kWh திறன் கொண்ட லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 449கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ARAI சான்றளிக்கப்பட்டு உள்ளது.
அதுவே, வழக்கமான விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் சிறிய அளவிலான 38kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இது வழங்கும் ரேஞ்ச் ஆனது 332கிமீ ஆகும். புதிய விண்ட்சர் இவி புரோ காரில் பேட்டரி அளவில் பெரியதாக இருப்பினும் அது பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து கிடைக்கும் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. இதன்படி, புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரிலும் அதிகப்பட்சமாக 136 எச்பி மற்றும் 200 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் ரேஞ்ச் ஆக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பவை ARAI சோதனையின் மூலம் பெறப்பட்டவை ஆகும். அதுவே, நிஜ உலகில் சற்று குறைவாகவே ரேஞ்ச் கிடைக்கும். ரேஞ்ச் என்பது 100% சார்ஜில் இருந்து 0% சார்ஜ் வரையில் கார் இயங்கக்கூடிய தொலைவு ஆகும். புதிய எம்ஜி விண்ட்சர் இவி புரோ காரில் ரேஞ்ச் சற்று அதிகமாக கிடைப்பதால், செல்வந்தர்களும் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை இனி வாங்குவர் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








