ஷோரூமில் வசீகரிக்கும் தோற்றத்தில் நிற்குது! புக் செய்த 8,000 பேருக்கு மகிழ்ச்சியில் கால் தரையில் இல்லை!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காருக்கான (Electric Car) வரவேற்பு மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை மேலும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய புரோ வெர்சன் 'விண்ட்சர் இவி புரோ' என்கிற பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஜி விண்ட்சர் இவி காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றாலும், பணம் படைத்தவர்கள் இதனை காட்டிலும் விலைமிக்க எலக்ட்ரிக் கார்கள் பக்கம் சென்றுவிடுகின்றனர். அத்தகையவர்களை கவரும் முயற்சியாகவே விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரை குறுகிய காலத்தில் நிறைய பேர் முன்பதிவு செய்துள்ளதாக நமது செய்தித்தளத்தில் கூட முன்னதாக தெரிவித்து இருந்தோம். எந்த அளவிற்கு குறுகிய காலத்தில் என்றால், 24 மணிநேரத்திற்குள் 8 ஆயிரம் விண்ட்சர் இவி புரோ கார்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

mg windsor ev pro

விண்ட்சர் இவி புரோ காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.17.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலை ஆனது காரை புக் செய்யும் முதல் 8,000 கஸ்டமர்களுக்கு மட்டுமே என எம்ஜி நிறுவனம் அறிவித்ததன் காரணமாகவே, 24 மணிநேரத்திற்குள் 8,000 விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எம்ஜி விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் கார்கள் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. இதனால், இந்த புதிய எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் இன்று (மே 17) முதல் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விண்ட்சர் இவி புரோ காரை புக் செய்தவர்கள் மகிழ்ச்சியில் திழைத்து வருகின்றனர்.

mg windsor ev pro

ஏற்கனவே விற்பனையில் உள்ள எம்ஜி விண்ட்சர் இவி காருக்கும், புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காருக்கும் தோற்றத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. இதனால் இரு கார்களையும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக நிறுத்தி வைத்தால் கூட வித்தியாசத்தை கண்டுப்பிடிப்பது கஷ்டம். காரின் பின்பக்கத்தில் வழங்கப்படும் புரோ பேட்ஜ்கள் மூலமாகவே விண்ட்சர் இவி புரோ காரை வேறுப்படுத்த முடியும்.

ஏற்கனவே கூறியதுபோல், விண்ட்சர் இவி காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டாக விண்ட்சர் இவி புரோ உருவாக்கப்பட்டுள்ளது. புதிய விண்ட்சர் இவி புரோ கார் ஆனது விண்ட்சர் இவி காரின் எஸ்ஸென்ஸ் (Essence) வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ட்சர் இவி கார்களை போன்று, இந்த புதிய எலக்ட்ரிக் காரிலும் பின்பக்கத்தில் 605 லிட்டர்கள் கொள்ளளவில் பொருட்களை வைக்கக்கூடிய பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பூட் ஸ்பேஸ் பகுதியில் பெரிய அளவிலான பேட்டரி வழங்கப்படுவதால், இதில் 579 லிட்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். தோற்றத்தில் ஒரு மாதிரியாக இருந்தாலும், விண்ட்சர் இவி புரோ காருக்கு பிரத்யேகமான மூன்று பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அரோரா சில்வர், க்ளாஸ் ரெட் மற்றும் செலாடன் நீலம் என்பன அந்த மூன்று பெயிண்ட் ஆப்ஷன்கள் ஆகும்.

விண்ட்சர் இவி புரோ காரின் கேபினுக்குள் 15.6-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8.8-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி, வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள், 9-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பனோராமிக் கண்ணாடி ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வரவேற்பை புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் கார் நிச்சயமாக அதிகரிக்கும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் மிகுந்த நம்பிக்கை உடன் உள்ளது. தற்போது இந்த கார் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், டெலிவிரிகள் மிக விரைவில் துவங்கப்படும். இந்த மாதத்தின் எம்ஜி விண்ட்சர் இவி காரின் விற்பனை எண்ணிக்கையில் விண்ட்சர் இவி புரோ காரின் எண்ணிக்கையும் அடங்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 17, 2025, 20:41 [IST]
English summary
Mg windsor ev pro electric car starts to arrive dealership showrooms
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+