டாடாவுக்கு சங்கு ஊத போகும் புதிய எலெக்ட்ரிக் கார்! வெறும் 24 மணி நேரத்துல இத்தன பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!

இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV). இதன் புதிய வேரியண்ட் (Variant) ஒன்றை எம்ஜி நிறுவனம் கடந்த மே 6ம் தேதி (May 6) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ (MG Windsor EV Pro) என்ற பெயரில், இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது ஸ்டாண்டர்டு எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார் உடன் ஒப்பிடும்போது, எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) அதிகம்.

தெளிவாக சொல்வதென்றால், ஸ்டாண்டர்டு எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில், 38 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் 331 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆனால் எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் காரில், 52.9 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் 449 கிலோ மீட்டர்கள் ஆகும்.

MG Windsor EV Pro

இதன் காரணமாக எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் முன்பதிவு (Bookings) எண்ணிக்கை இதை நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகின்றன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே, எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் காரை, 8 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து விட்டனர்.

இதன் காரணமாக எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் காரின் அறிமுக சலுகை விலை முடிவுக்கு வந்துள்ளது. அதாவது எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் கார் முதலில் 17.50 லட்ச ரூபாய் என்ற அறிமுக சலுகை விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இது தற்போது 18.10 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 60 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

MG Windsor EV Pro Display

அதே நேரத்தில் எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் காரை உங்களால் Battery As A Service (BAAS), திட்டத்தின் கீழும் வாங்க முடியும். இது பேட்டரியை வாடகைக்கு எடுத்து கொள்ளும் திட்டம் ஆகும். முதலில் எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் காரின் BAAS விலையானது, 12.50 லட்ச ரூபாய் + ஒரு கிலோ மீட்டருக்கு 4.50 ரூபாய் கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

அதாவது நீங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 4.50 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் இந்த விலை தற்போது 13.10 லட்ச ரூபாய் + ஒரு கிலோ மீட்டருக்கு 4.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த வகையிலும் எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் காரின் விலை 60 ஆயிரம் ரூபாய் உயர்வை சந்தித்துள்ளது.

எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே என ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி விண்ட்சர் இவி ப்ரோ எலெக்ட்ரிக் காரின் வருகை, டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி (Mahindra XUV400 EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 9, 2025, 18:46 [IST]
English summary
Mg windsor ev pro garners 8000 bookings read all details here
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+