11 மாதமா டாடாவுக்கே தண்ணி காட்டும் எம்ஜி எலக்ட்ரிக் கார்! கஸ்டமர்ஸ் கூடிட்டே போறாங்க!

எம்ஜி மோட்டார் (MG Motor), இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் சமீப காலத்தில் கவனத்தை ஈர்த்திருக்கும் நிறுவனம். பிரிட்டிஷ் நிறுவனமாக தோன்றி, கடந்த பல வருடங்களாகவே சீனாவின் மிக பெரும் SAIC குழுமத்தின் கீழ் எம்ஜி மோட்டார் செயல்படுகிறது. இதற்கிடையில், 2019இல் இந்தியாவில் நுழைந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்தது.

இதன் பின்னரே இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் வளர்ச்சி ஆரம்பமாகியது என சொல்ல வேண்டும். குறிப்பாக, எம்ஜி- ஜே.எஸ்.டபிள்யூ கூட்டணி எலக்ட்ரிக் கார்களில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தது. முதல் எலக்ட்ரிக் காராக கோமெட் இவி (Comet EV)-ஐ அறிமுகம் செய்து எம்ஜி நிறுவனம் மார்க்கெட்டை அதிர வைத்தது. ஏனெனில், இந்தியாவிலேயே விலை குறைவான எலக்ட்ரிக் காராக கோமெட் இவி அறிமுகம் செய்யப்பட்டது.

mg windsor ev electric car sales

இதனாலேயே கோமெட் இவி மீது எம்ஜி பலத்த நம்பிக்கை வைத்தது. ஆனால், பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் கோமெட் இவி வித்தியாசமாக இருந்ததால், இந்த காருக்கு கலவையான விமர்சனமே இப்போதுவரையிலும் கிடைத்து வருகிறது. அப்படியென்றால், எந்த காரை பற்றி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம் என்றால், இதற்கடுத்து அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காரை பற்றி ஆகும்.

எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் கார் அளவிற்கு மிகவும் குறைந்த விலையில் கொண்டுவரப்படவில்லை என்றாலும், எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு தொடர்ந்து புக்கிங் (Booking) குவிந்து வருகிறது. இது நடந்து முடிந்த கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. இதன் மூலமாக, தொடர்ச்சியாக 11 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையிலான எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

mg windsor ev electric car sales

அதாவது, விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் அடுத்தடுத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 511 ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விண்ட்சர் இவி காரை இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது.

அப்போதில் இருந்து இப்போதுவரையில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தையும் தாண்டி செல்கிறது. அதாவது, மாதத்திற்கு சராசரியாக 4 ஆயிரத்திற்கும் அதிகமான கஸ்டமர்களால் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் வாங்கப்படுகிறது. இதற்காகவே, iCOTY சார்பில் 2025ஆம் ஆண்டிற்கான வேகமாக வளர்ந்துவரும் க்ரீன் கார் விருது கோமெட் இவி காருக்கு வழங்கப்பட்டது.

mg windsor ev electric car sales

இந்த அளவிற்கு எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் வரவேற்பை பெறுவதற்கு முக்கியமான காரணம், BaaS திட்டத்திலும் விண்ட்சர் இவி விற்பனை செய்யப்படுவது ஆகும். அதாவது, காருக்கான பேட்டரியை குத்தகை முறையில் வாங்கி, அவற்றை கட்டணம் முறையில் செலுத்துவதற்கு BaaS வழிவகை செய்கிறது. இதன் மூலமாக, பேட்டரிக்கான செலவு இல்லாமல் குறைந்த விலையில் விண்ட்சர் இவி காரை வாங்க முடிகிறது.

எந்த அளவிற்கு குறைவு என்றால், BaaS திட்டத்தின் மூலம் நன்கு அளவில் பெரியதான விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வெறும் ரூ.9.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) வாங்க முடிகிறது. BaaS திட்டத்தின் மூலம் வாங்கும்போது விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் சார்ஜிங் கட்டணமாக கிமீ-க்கு ரூ.3.9 செலுத்த வேண்டியிருக்கும். BaaS முறையில் மட்டுமில்லாமல், பேட்டரி உடன் மற்ற எலக்ட்ரிக் கார்களை போலவும் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு விண்ட்சர் இவி முக்கியமான பங்களித்து வருகிறது. தொடர்ச்சியாக 11 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனை அதிகரித்து வருவது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இது வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 3, 2025, 20:52 [IST]
English summary
Mg windsor ev reigns as indias best selling electric car for 11 months in a row
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X