கம்மி விலைக்கு வித்தா யாரு தான் வாங்க மாட்டாங்க? இந்த காரை 27 ஆயிரம் பேர் வாங்கிட்டாங்க!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது மக்களுக்கு ஏற்ற இவி வாகனங்களை களம் இறக்குவதால் மக்கள் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க யோசித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அறிமுகமான எலெக்ட்ரிக் காரின் விற்பனை முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் விண்ட்ஸர் இவி கார் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அறிமுகமானது. இந்த கார் ஒரு சியூவிகாராக அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் 38 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த மே மாதம் எம்ஜி விண்ட்ஸர் புரோ கார் அறிமுகமானது. இந்த கார் 52.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த காருக்கான புக்கிங் துவங்கியது முதல் 24 மணி நேரத்தில் 8000 கார்கள் புக்காகியுள்ளது.

முதலில் மெட்ரோ நகரங்களில் மட்டுமே இந்த காரின் விற்பனை துவங்கிப்பட்ட நிலையில் தற்போது மெட்ரோ அல்லாத நகரங்களிலும் விற்பனை துவங்கியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த கார் விற்பனையில் 48 சதவீதம் அளவிற்கு விற்பனை இருக்கிறது. இந்த கார் இதுவரை 30க்கும் அதிகமான அவார்டுகளை பெற்றுள்ளது.
எம்ஜி விண்ட்ஸர் இவி கார் தான் இந்தியாவில் முதல் முறையாக பேட்டரி அஸ் சர்வீஸ் என்ற முறயில் வாகனங்களை விற்பனை செய்கிறது. இதனால் குறைந்த விலையில் மக்களால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடியும். எம்ஜி விண்ட்ஸர் இவி கார் பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் முறையில் ரூ10 லட்சம் முதல் ரூ13.10 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் முழுமையாக நீங்கள் வாங்க வேண்டும் என்றால் ரூ14 லட்சம் முதல் ரூ18.10 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரின் வடிவமைப்பை பொருத்தவரை இந்த கார் ஹேண்ட்ச் பேக், எம்பிவி மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய கார்களின் டிசைனை கலந்து இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி டிஆர்எல், எம்ஜி லோகோ உள்ளிட்ட பல அம்சங்கள் சிறப்பாக இருகு்கிறது. மக்கியமாக பெரிய ஜன்னல்கள் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள சிறப்பம்சமாக அதிக இடவசதியுடன் கூடிய கேபின்கள், 15.6 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போக இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், சாய்வான சீட்டுகள், 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு ஃபங்சன் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.

இந்த கார் அறிமுகமாகி கிட்டதட்ட ஒரு வருடம் கூட ஆகவில்லை. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் துவங்கி தற்போது வரை 27 ஆயிரம் கார்கள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த கார் சமீபகாலமாக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இது மிகப்பெரிய அளவில் விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி விண்ட்ஸர் இவி கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக மாறியுள்ளது. இந்த காரை மக்கள் விரும்பி வாங்க காரணம் அதன் பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் முறையில் இருப்பது முக்கியமான காரணமாக இருக்கும். மக்கள் பலர் குறைந்த விலையில் காரை வாங்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









