டாடாவுக்கு தண்ணி காட்டிட்டு இருக்கும் கார் மாடல்ல இதை செய்ய போறாங்களா! சீன நிறுவனம் வாலாட்ட தொடங்கிருச்சு!
சீன நிறுவனத்தின் பின்புலத்தில் இயங்கக் கூடிய ஓர் கார் உற்பத்தி நிறுவனமே எம்ஜி மோட்டார் (MG Motor). இந்த நிறுவனம் இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ (JSW) உடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாட்டில் இயங்கி வருகின்றது. இதன் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக தற்போது விண்ட்ஸர் இவி (Windsor EV) மாறி இருக்கின்றது. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சியூவி (CUV) ரக கார் மாடலே இது ஆகும். இதற்கு நாட்டு மக்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதன் விளைவாக டாடா நிறுவனத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் கார் மாடலாக அது மாறியுள்ளது. டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), இதுவே முன்னதாக நாட்டின் நம்பர் 1 விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருந்து வந்தது.

ஆனால், இந்த இடத்தை தற்போது விண்ட்ஸர் இவி தட்டி பறித்திருக்கின்றது. மேலும் ஒவ்வொரு மாத விற்பனையில் டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப் பெரிய சவால் விடுக்கும் கார் மாடலாக அது மாறியிருக்கின்றது. இத்தகைய கார் மாடலை இப்போது ஒரே ஒரு பேட்டரி பேக் தேர்வில் மட்டுமே எம்ஜி மோட்டார் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இது ஓர் மிகப் பெரிய குறையாக பார்க்கப்படுகின்றது. இந்த குறையையே விரைவில் எம்ஜி நிறுவனம் போக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, கூடுதலாக ஓர் பேட்டரி பேக் தேர்வை நிறுவனம் விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.
அந்த புதிய பேட்டரி பேக் தேர்வானது தற்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் சற்றே பெரிய பேட்டரி பேக் ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களும் உள்ளன. 50 kWh பேட்டரி பேக் ஆப்ஷனே இதில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.
இதுபற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் அது பற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும், இந்த பெரிய பேட்டரி பேக் கொண்ட விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரை வருகின்ற ஏப்ரல் மாதம் எதிர்பார்க்கலாம் என தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது விற்பனையில் இருக்கும் விண்ட்ஸர் இவி-யில் 38 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷனே வழங்கப்படுகின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 331 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் ஆரம்ப விலை ரூ. 13.50 லட்சம் ஆகும்.
அதிகபட்ச விலையே ரூ. 15.50 லட்சம் ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஒரு வேளை இதில் பெரிய பேட்டரி பேக் ஆப்ஷன் வழங்கப்படும் எனில் அது ரூ. 1 லட்சம் வரை சற்றே அதிக விலைக் கொண்டதாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், துள்ளியமான விலை விபரம் இன்னும் தெரியவில்லை. விரைவிலேயே இதுபற்றிய விபரங்கள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏற்கனவே எம்ஜி மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடாவிற்கு தண்ணிக் காட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தான் வழங்கிக் கொண்டிருக்கும் போட்டியை மேலும் இரட்டிப்பாக்கும் விதமாக விண்ட்ஸர் இவியில் பெரிய பேட்டரி பேக் ஆப்ஷனை அறிமுகம் செய்யும் பணியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








