கார்களை நிறுத்துவதற்கு இடம் போதவில்லை!! அத்தனை பேருக்கும் ஒரே நாளில் டெலிவிரி - எம்ஜி ஷோரூமில் நடந்த அதிசயம்!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் புரோ இவி (Windsor Pro EV) எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதாக சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் வீடியோ உடன் பார்த்திருந்தோம். ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், காரின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்படும் என கூறியிருந்தோம். அதன்படி, புதிய எம்ஜி விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி செய்வதில், பெங்களூருவை சேர்ந்த எம்ஜி டீலர்ஷிப் ஷோரூம் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.

எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதுமே தேவை அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாகவே எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் புது, புது எலக்ட்ரிக் கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவிலேயே குறைவான விலையிலான எம்ஜி கோமெட் இவி (Comet EV) எலக்ட்ரிக் கார் ஆரம்பத்தில் கவனத்தை ஈர்த்தாலும் அதன்பின் பெரியதாக சோபிக்கவில்லை.

mg windsor pro electric cars

ஆனால், எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை அறிந்த உடனே எம்ஜி நிறுவனம் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டாக விண்ட்சர் இவி புரோவை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த காருக்கான முன்பதிவுகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன.

தற்சமயம் இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.18.09 லட்சமாக உள்ளது. இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இத்தகைய விலையுயர்ந்த காரை தான் பெங்களூருவில் எம்ஜி டீலர்ஷிப் ஷோரூம் ஒன்று ஒரே நாளில் 150க்கும் மேற்பட்ட கார்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளது.

mg windsor pro electric cars

பெங்களூருவில் எம்ஜி மோட்டார் உள்பட பல்வேறு பிராண்ட்களின் கார்களை விற்பனை செய்வதற்கான பல டீலர்ஷிப் ஷோரூம்களை கொண்ட குழுமம் தான், ஜூபிலண்ட் மோட்டார்வொர்க்ஸ் (Jubilant Motorworks) ஆகும். பெங்களூருவில் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நிறுவனத்திற்கு கார் ஷோரூம்கள் செயல்படுகின்றன. இத்தகைய பிரம்மாண்டமான நிறுவனம் தான் ஒரே நாளில் 150 எம்ஜி விண்ட்சர் புரோ இவி கார்களை டெலிவிரி செய்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜூபிலண்ட் மோட்டார்வொர்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக பல டீலர்ஷிப் ஷோரூம்கள் செயல்படுகிறது அல்லவா... அவற்றுள் பெங்களூருவில் செயல்படும் ஷோரூம்களில் விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் கார்களை புக் செய்தவர்களை ஒரே இடத்திற்கு அழைத்து மெகா நிகழ்ச்சி போல் நடத்தி கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், வளாகம் ஒன்றினுள் பல வண்ணங்களில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எம்ஜி விண்ட்சர் புரோ இவி கார்களை காணலாம். இந்த 150 விண்ட்சர் புரோ இவி கார்களும் மே 8ஆம் தேதிக்கு பின் கஸ்டமர்களால் புக் செய்யப்பட்டவை ஆகும். ஏனெனில், மே 8ஆம் தேதியில் இருந்துதான் இந்த காருக்கான முன்பதிவுகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் துவங்கியது.

முன்பதிவுகள் துவங்கப்பட்ட சமயத்தில் இந்த காருக்கான ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.17.49 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த விலை ஆனது புக் செய்யும் முதல் 8,000 பேருக்கு மட்டும்தான் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே, 8,000 விண்ட்சர் இவி புரோ கார்கள் முதல் 24 மணிநேரத்திற்கு உள்ளாகவே புக் ஆகிவிட்டது. ரூ.18.09 லட்சம் என்பது பேட்டரி உடன் விண்ட்சர் புரோ இவி காரின் விலை ஆகும். அதுவே, பேட்டரி இல்லாமல் BaaS திட்டத்தின்கீழ் காரின் விலை ரூ.13.09 லட்சம் மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், புதிய விண்ட்சர் புரோ இவி காருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். இருப்பினும், வழக்கமான விண்ட்சர் இவி காரை காட்டிலும் விலைமிக்கதாக உள்ளதினால் எதிர்பார்க்கும் அளவிற்கு புக்கிங் கிடைக்குமா என்கிற சந்தேகமும் இருந்தது.

ஆனால், முதல் 24 மணிநேரத்திற்கு உள்ளாகவே 8,000 விண்ட்சர் புரோ இவி கார்கள் புக் செய்யப்பட்டது மட்டுமில்லாமல், தற்போது ஒரு குறிப்பிட்ட ஷோரூம் மூலமாக மட்டும் ஒரே நாளில் 150 விண்ட்சர் இவி புரோ கார்கள் டெலிவிரி செய்யப்பட்டு இருப்பது இன்னும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 18, 2025, 14:20 [IST]
English summary
Mg windsor pro electric cars delivered 150 units in single day in bengaluru
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+