கொஞ்சம் கொஞ்சமா முடிச்சுட்டு இருந்தாங்க.. இப்போ டாடாவ ஒரேடியா முடிச்சு விட திட்டம் போட்டுட்டாங்க..

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் கதையைக் கொஞ்சம் கொஞ்சமா முடித்துக் கொண்டிருக்கும் பிராண்டு ஒன்று அதை ஒரேடியாக முடித்துக்கட்ட இப்போது திட்டம் போட்டுள்ளது. எம்ஜி மோட்டார் (MG Motor), இதுவே டாடாவின் கதையை முடிக்கும் திட்டத்தில் உள்ள பிராண்டு ஆகும். இந்த நிறுவனம் மின்சார கார்கள் விற்பனையிலேயே டாடாவிற்கு மிகப் பெரிய தலைவலியை வழங்கிக் கொண்டிருக்கின்று. விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் ஒற்றை கார் மாடலை வைத்துக் கொண்டே ஜாம்பவான் நிறுவனமான டாடாவிற்கு மிகப் பெரிய சவாலை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த காரையே இப்போது கூடுதல் சிறப்புமிக்கதாக மாற்றும் முயற்சியில் எம்ஜி நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. அதாவது, தன்னுடைய இந்த புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடலில் புதிய வேரியண்டை அது சேர்க்க இருக்கின்றது. விண்ட்ஸர் ப்ரோ (Windsor Pro) எனும் புதுமுக வேரியண்ட்டையே அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Mg windsor ev pro to launch on may 06

இதன் அறிமுகம் வருகின்ற 6ஆம் தேதி அரங்கேற இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களஅ தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக விண்ட்ஸர் ப்ரோ-வின் டீசர் படத்தை எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இது விண்ட்ஸர் இவி கார் காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் மின்சார கார் மாடலாக விண்ட்ஸர் இவி உள்ளது. இது ஓர் சியூவி (CUV) ரக கார் மாடல் ஆகும். எஸ்யூவி கார்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அதிக இட வசதியை வழங்கக் கூடிய ஓர் வாகனமே சியூவி ரக வாகனம் ஆகும்.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் மற்றும் ஒரே சியூவி ரக கார் மாடல் இதுவே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரில் இப்போதைய நிலவரப்படி ஒரே ஒரு பேட்டரி பேக் ஆப்ஷனை மட்டுமே எம்ஜி வழங்கிக் கொண்டிருக்கின்றது. 38 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷனை மட்டுமே அது வழங்கிக் கொண்டுள்ளது.

இதிலேயே புதிதாக 50.6 kWh பேட்டரி ஆப்ஷன் இணைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பேட்டரி பேக்கைக் கொண்ட வேரியண்டே விண்ட்ஸர் ப்ரோ என சந்தையில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த தேர்வில் ஓர் முழு சார்ஜில் 460 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

Mg windsor ev pro side view

இந்த தேர்வில் பேட்டரி பேக் மட்டுமல்ல புதிதாக லெவல் 2 அடாஸ் (ADAS) தொழில்நுட்பமும் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், அதிக தொழில்நுட்ப வசதி மற்றும் ரேஞ்சை விரும்புவோர் மத்தியில் இந்த புதிய ஆப்ஷனுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

இதேபோல், 134 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனவே அனைத்து நிலைகளிலும் இந்த கார் வாகன காதலர்களை கவரக் கூடியதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது.

Mg windsor ev pro full view

இப்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, இந்த காரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார் பிளே இணைப்பு வசதிக் கொண்ட பெரிய திரை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 9 ஸ்பீக்கர்கள் அடங்கிய இன்ஃபினிட்டி சவுண்டு சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரில் வழங்கப்பட இருக்கும் அடாஸ் அம்சத்தின் வாயிலாக க்ரூஸ் கன்ட்ரோல், லேன் அசிஸ்ட், மோதலை தவிர்த்தல் என ஏகப்பட்ட உயிர் காக்கும் வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால், உயிர்களைக் காப்பதில் தலை சிறந்த காராக புதிய விண்ட்ஸர் ப்ரோ இருக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 2, 2025, 23:03 [IST]
English summary
Mg windsor pro launching on may 6 2025 with enhanced features and battery range
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X