என்னங்க இந்தியர்கள் இப்படி கால வாறி விட்டுட்டாங்க! டாடாவிடம் வாலாட்டிய கார் மாடல் இப்ப பெரும் விற்பனை சரிவில்!
டாடா (Tata)-விடம் வாலாட்டிய கார் மாடல் ஒன்று இப்போது விற்பனையில் மாபெரும் சரிவை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் முன்னணி எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களில் நெக்ஸான்.இவி (Nexon.EV)-யும் ஒன்று ஆகும். இந்த எஸ்யூவி ரக இ-காரே இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் மின்சார கார் மாடலும்கூட.
ஆனால், இந்த இடத்தை அது இழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. சொல்லப்போனால் கடந்த சில மாதங்களாகவே இந்த இடத்தை எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV) எனும் கார் மாடலே ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலே தற்போது விற்பனையில் வீழ்ச்சியிலும் சிக்கத் தொடங்கி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன.

26 சதவீதம் விற்பனை வீழ்ச்சியையே அது சந்தித்து இருக்கின்றது. இது நிறுவனத்திற்கு மட்டுமல்ல, இந்த கார் மாடல் மிகப் பெரிய சக்சஸ்ஃபுல் வாகனமாக மாறும் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் பேரிடியாக அமைந்திருக்கின்றது. நிறுவனத்தின் 2025 பிப்ரவரி மாதத்தில் மொத்தமாகவே 4,002 யூனிட்டுகள் வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது.
இதில் அதன் அனைத்து கார் மாடல்களும் அடங்கும். ஆனால், இந்த எண்ணிக்கையில் மாபெரும் பங்களிப்பை விண்ட்ஸர் இவி கார் மாடலே கொண்டுள்ளது. 61 சதவீதம் பங்களிப்பையே அது கொண்டிருக்கின்றது. அதாவது, மொத்த விற்பனையில் 2,431 யூனிட்டுகள் வரை விண்ட்ஸர் இவி விற்பனையாகி இருக்கின்றது.
அதேநேரத்தில், இதே விண்ட்ஸர் இவி சென்ற ஜனவரி மாதத்தில் 3,277 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருந்தது. இதை வைத்து பார்க்கையில் ஜனவரி மாதத்தைக் காட்டிலும் சென்ற பிப்ரவரி மாதத்தில் 846 யூனிட்டுகள், அதாவது, 26 சதவீதம் குறைவான விற்பனையை விண்ட்ஸர் இவி பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த திடீர் விற்பனை வீழ்ச்சிக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. மிக முக்கியமாக, எம்ஜி நிறுவனம் இந்த கார் மாடலில், பெரிய பேட்டரி பேக் தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதே இந்த விற்பனை வீழ்ச்சி காரணம் என கூறப்படுகின்றது.
இது எப்படி காரணம் ஆகும் என கேட்கலாம்?.. குறைவான பேட்டரி பேக்கில் குறைவான ரேஞ்சை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். அதுவே பெரிய பேட்டரி பேக் என்றால் அதிகம் தூரம் பயணிக்க முடியும். எனவேதான் இந்தியர்கள் இந்த கார் மாடலின் பெரிய பேட்டரி பேக் வெர்ஷனுக்காகக் காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதன் விளைவாகவே தற்போது விண்ட்ஸர் இவியின் விற்பனை மிகப் பெரிய சரிவைச் சந்தித்து இருக்கின்றது என கூறப்படுகின்றது.
இப்போது விண்ட்ஸர் இவி 38 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 331 கிமீ தூரம் வரை மட்டுமே ரேஞ்ச் தரும். இந்த பேட்டரி பேக்குடனேயே கூடுதலாக 50 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் தேர்வை வழங்கும் முயற்சியில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் களமிறங்கி இருக்கின்றது.
இது ஓர் முழு சார்ஜில் அதிகபட்சமாக 460 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய அதிக ரேஞ்ச் தரும் விண்ட்ஸர் இவி தேர்விற்காகவே இந்தியர்கள் காத்திருக்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதான் உண்மையா என்பது யாருக்கும் தெரியாது. இந்த காரை வாங்காமல் தவிர்த்தவர்களுக்கு மட்டுமே அதற்கான காரணம் தெரியும்.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் விண்ட்ஸர் இவி ரூ. 13.5 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதே காரை 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) திட்டத்தின்கீழ் வாங்கினால் ரூ. 9.9 லட்சத்திற்கே வாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால், ஒவ்வொரு கிமீ பயன்பாட்டிற்கும் 3 ரூபாய் 50 காசுகளை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாருக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். மொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்தியாவில் விண்ட்ஸர் இவி விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்சைடு (Excite), எக்ஸ்க்ளூசீவ் (Exclusive) மற்றும் எசன்ஸ் (Essence) ஆகியவையே அவை ஆகும்.
புதிய பெரிய பேட்டரி பேக் தேர்வு இந்த மூன்று வேரியண்டுகளிலும் ஓர் ஆப்ஷனாக வழங்கப்படலாம் அல்லது புதிய வேரியண்டின்கீழ் அது விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விண்ட்ஸர் இவி ஓர் சியூவி ரக கார் மாடல் ஆகும். மேலும், இதுவே இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சியூவி ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எஸ்யூவி கார்களைவிட மிக தாராளமான இட வசதி மற்றும் லக்கேஜ்களை ஏற்றிச் செல்லும் வசதிக் கொண்ட வாகனங்களே சியூவி ரக கார்கள் ஆகும். இந்த காரில் அதிக இட வசதி மட்டும் அல்ல மிகவும் சௌகரியமான டிராவல் அனுபவத்தைப் பெறுவதற்கான வசதிகளையும் எம்ஜி வழங்கி இருக்கின்றது.
குறிப்பாக, விமானங்களில் வழங்கக் கூடிய இருக்கைகளை இந்த காரில் அது வழங்கி உள்ளது. அதை 135 டிகிரி வரை சாய்த்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே டிராவலின்போது மிகவும் அசத்தலான மற்றும் வேறு எந்த கார்களிலும் கிடைக்காத தனித்துவமான ரைடு அனுபவம் இதில் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனித்துவமான அம்சங்கள் பலவற்றை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. ஆனால், இப்போது ஏனோ அந்த டிமாண்ட் மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கின்றது. டாடா நெக்ஸான்.இவி இடம் வாலாட்டிய கார் மாடலுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
அதேவேளையில், புதிய பெரிய பேட்டரி பேக் உடன் விண்ட்ஸர் இவி விற்பனைக்கு வரும் எனில் அது மீண்டும் சந்தையை தன் பக்கம் வளைத்துப் போடும் என நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் இந்தியாவில் பெரிய பேட்டரி பேக் கொண்ட இ-வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், விண்ட்ஸர் இவி சக்சஸ்ஃபுல் மாடலாக மாறுமா என்பதைப் பார்க்க நாம் கொஞ்சம் பொருத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








