ஒரே அடியா 6 லட்ச ரூபாய் கொறச்சுட்டாங்க! இனி இந்த காரோட விலை உண்மையாவே இவ்ளோதானா! டாடா சோலி முடின்ச்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV). இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்ற பெருமை இஸட்எஸ் இவி-யிடம் உள்ளது.
எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) ஆகிய எம்ஜி நிறுவனத்தின் மற்ற எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம், இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு பிறகுதான் விற்பனைக்கு வந்தன. எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரில், 50.3 kWh பேட்டரி (Battery) வழங்கப்பட்டுள்ளது.

இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range), அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யும் தூரம் 461 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (ARAI Range) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பனரோமிக் சன்ரூஃப், 25.7 செமீ ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், 75க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள் என எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

இவை தவிர, 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) ஆகிய வசதிகளும், எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் கார் மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை தற்போது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6.14 லட்ச ரூபாய் வரை எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே வரும் மாதங்களில் இதன் விற்பனை எண்ணிக்கை உயரலாம்.
எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்சிக்யூட்டிவ் வேரியண்ட்டின் புதிய விலை 17.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் விலை 99 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எக்ஸைட் ப்ரோ வேரியண்ட்டின் புதிய விலை 18.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை 1.98 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கம் எக்ஸ்க்ளூசிவ் ப்ளஸ் டார்க் க்ரே வேரியண்ட்டின் புதிய விலை 19.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 5.65 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எக்ஸ்க்ளூசிவ் ப்ளஸ் ட்யூயல் டோன் ஐகானிக் ஐவரி வேரியண்ட்டின் புதிய விலையும் 19.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை 5.85 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 100 இயர் எடிசன் வேரியண்ட்டின் புதிய விலையும் 19.50 லட்ச ரூபாயாகதான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலையும் 5.85 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எஸன்ஸ் டார்க் க்ரே வேரியண்ட்டின் புதிய விலை 20.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை 5.94 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடைசியாக எஸன்ஸ் ட்யூயல் டோன் ஐகானிக் ஐவரி வேரியண்ட்டின் புதிய விலையும் 20.50 லட்ச ரூபாயாகதான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் விலைதான் இருப்பதிலேயே அதிகபட்சமாக 6.14 லட்ச ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த அதிரடியான விலை குறைப்பு காரணமாக, வரும் மாதங்களில் எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கை உயரலாம் என நாங்கள் கருதுகிறோம். இது டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) ஆகிய கார்களுக்கு எல்லாம் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








