20 வருஷமா மஹிந்திரா வித்துட்டு இருக்கும் காருக்கு இன்னும் மவுசு குறையல! டாடா கார்கள் எல்லாம் பின்தங்கி உள்ளன!

எஸ்யூவி கார்கள் (SUV Cars)-க்கு நம் இந்தியர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கடந்த சில வருடங்களாகவே கிடைத்து வருகிறது. பொதுவாக, எஸ்யூவி கார்கள் பல்வேறு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஆகும். 4.4 மீட்டர்களில் இருந்து 4.7 மீட்டர்கள் வரையிலான நீளத்துடன், கொஞ்சம் நீளமான எஸ்யூவி கார்களாக மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்தியாவில் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 28 ஆயிரத்து 204 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 பிப்ரவரியில் 30 ஆயிரத்து 386 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை ஆனது 2,182 யூனிட்கள் குறைந்துள்ளது.

mid-size suv cars sales report

வழக்கம்போல், கடந்த பிப்ரவரி மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவி காராக முதலிடத்தை மஹிந்திரா ஸ்கார்பியோ பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 618 ஆகும். இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருப்பினும், ஸ்கார்பியோ கார்களின் வழக்கமான விற்பனை எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

ஏனெனில், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 51 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல், இந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் 15 ஆயிரத்து 442 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், வழக்கத்தை காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 1500- 1800 யூனிட்கள் குறைந்துள்ளது.

mid-size suv cars sales report

மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களாக ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்கார்பியோவுக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது மற்றும் 3வது இடங்களிலும் மஹிந்திராவின் தயாரிப்புகள் தான் உள்ளன. அதாவது, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து உருவாக்கப்படுபவையே ஆகும்.

2வது இடத்தில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆனது கடந்த பிப்ரவரி மாதத்தில் 7 ஆயிரத்து 468 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 பிப்ரவரியை காட்டிலும் எக்ஸ்யூவி700 கார்களின் இந்த விற்பனை எண்ணிக்கை 922 யூனிட்கள் அதிகம் என்றாலும், கடந்த 2025 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 931 யூனிட்கள் குறைவாகும். 3வது இடத்தில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car) உள்ளது.

mid-size suv cars sales report

மஹிந்திராவில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் அறிமுகமான இந்த மஹிந்திரா கார் ஆனது கடந்த பிப்ரவரி மாதத்தில் 2,205 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியை காட்டிலும் இது கிட்டத்தட்ட டபுள் மடங்காகும். 4வது மற்றும் 5வது இடங்களில் டாடா மோட்டார்ஸின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களான சஃபாரி மற்றும் ஹெரியர் உள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,562 மற்றும் 1,376 ஆகும்.

ஹூண்டாய் அல்கஸார் இந்த வரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 1,264 அல்கஸார் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து, 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ள எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் கார்களின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 515 மற்றும் 120 ஆகும். 9வது இடத்தில் உள்ள ஹூண்டாய் டக்ஸன் கடந்த மாதத்தில் 73 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இவை இல்லாமல், 2 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் ஒரேயொரு சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரும் கடந்த மாதத்தில் விற்பனை ஆகியுள்ளன.

mid-size suv cars sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் மஹிந்திராவின் ஆதிக்கம் வலுவாக உள்ளதை இந்த சேல்ஸ் ரிப்போர்ட் காட்டுகிறது. குறிப்பாக, மஹிந்திராவின் சமீபத்திய எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் கார் இந்த அளவிற்கு விற்பனையாகும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. வரும் மாதங்களில் இந்த எலக்ட்ரிக் கார் மஹிந்திராவின் மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை முந்தினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

FAQs
2024 பிப்ரவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரியில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஒரேயொரு மிட்-சைஸ் எஸ்யூவி கார் எது?

மஹிந்திரா எக்ஸ்யூவி700

எக்ஸ்.இ.வி 9இ உடன் அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு மஹிந்திரா எலக்ட்ரிக் கார் என்ன?

பிஇ 6 (BE 6)

இந்தியாவில் மஹிந்திராவில் இருந்து எத்தனை மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன?

மூன்று. ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி700 & எக்ஸ்.இ.வி 9இ

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Monday, March 17, 2025, 11:45 [IST]
English summary
Mid size suv cars sales report of 2025 february mahindra cars top on list
மேலும்... #car sales #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X