23 வருஷமா மார்க்கெட்டில் இருக்கும் காருக்கு இப்பவும் செம்ம மவுசு! மஹிந்திராவுக்கு கைமேல் பலன்!
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்குதான் கடந்த சில வருடங்களாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு காரணம், நிமிர்ந்த கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்களை வாங்கவே நிறைய மக்கள் விரும்புகின்றனர். எஸ்யூவி கார்கள் பல விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை ஒவ்வொரு விதமான பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ஆகும். 4.4 மீட்டர் நீளத்தில் இருந்து 4.7 மீட்டர் வரையில் நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் என அழைக்கப்படுகின்றன.
இத்தகைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை பல முன்னணி கார் நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனை செய்கின்றன. தற்சமயம் இந்தியாவில் 11 விதமான மிட்-சைஸ் எஸ்யூவி கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் 29 ஆயிரத்து 479 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 28 ஆயிரத்து 27 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை ஆனது 5.18%, அதாவது 1,452 யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஆனால் உண்மையில், மஹிந்திராவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனை மட்டுமே அதிகரித்துள்ளது.
மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் அனைத்தின் விற்பனையும் 2024 ஏப்ரலை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2025 ஏப்ரல் மாதத்திலும் 27 ஆயிரத்து 734 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை ஆனது 6.29%, அதாவது 1,745 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவி காராக முதலிடத்தை மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) பிடித்துள்ளது. முதலிடம் மட்டுமின்றி, இந்த லிஸ்ட்டில் முதல் மூன்று இடங்களை மஹிந்திராவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் தான் பிடித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 534 ஆகும்.
2024 ஏப்ரலில் 14 ஆயிரத்து 807 ஸ்கார்பியோ கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்து இருந்தது. 2024 ஏப்ரலிலாவது பரவாயில்லை... 2025 மார்ச் மாதத்தில் 13 ஆயிரத்து 913 ஸ்கார்பியோ கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இவ்வாறு மாதத்திற்கு மாதம் ஸ்கார்பியோ கார்கள் விற்பனை அதிகரித்து வருவதினாலேயே மஹிந்திரா கார்கள் விற்பனை எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஸ்கார்பியோவுக்கு அடுத்து 2வது மற்றும் 3வது இடங்களில் மஹிந்திராவின் மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களான எக்ஸ்யூவி700 (XUV700) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car) உள்ளன. இவை இரண்டின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 6,811 மற்றும் 2,441 ஆகும். இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ளவை 1,500 யூனிட்களுக்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.
4வது இடத்தில் 1,340 யூனிட்கள் விற்பனை உடன் டாடா சஃபாரி உள்ளது. 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ள ஹூண்டாய் அல்ட்ராஸ் மற்றும் டாடா சஃபாரி கார்களின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,017 மற்றும் 1,012 ஆகும். 7வது இடத்தை எம்ஜி ஹெக்டர் கார் 977 யூனிட்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே ஜீப் காம்பஸ் (137), ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (91) மற்றும் ஹூண்டாய் டக்ஸன் (65) கார்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், கடந்த ஏப்ரல் மாதத்தில் 54 சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மஹிந்திராவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனை மட்டுமே 2024 ஏப்ரலை விட இந்த ஆண்டு ஏப்ரலில் அதிகரித்து இருப்பது கேட்பதற்கு ஆச்சிரியமாக உள்ளது. மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் அளவில் பெரியவை மற்றும் விலைமிக்கவை என்பதால், இத்தகைய கார்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்வதன் மூலம் மஹிந்திராவின் வணிகம் பெரியதாகி கொண்டே வருவதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









