இந்த காரை வாங்குறதுக்கு சொத்தை தான் விற்கனும்!! அளவில் சின்னதாக இருந்தாலும் காரின் விலை பல லட்சத்தில்!
பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தின் கீழ் செயல்படும் மினி (MINI) நிறுவனத்தில் இருந்து கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக JCW எனப்படும் ஜான் கூப்பர் வொர்க்ஸ் (John Cooper Works) எடிசன்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் கடந்த ஜனவரி மாதத்தில் மினி கூப்பர் எஸ் ஜே.சி.டபிள்யூ (Cooper S JCW) கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது மினி நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆன கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் ஜேசிடபிள்யூ (Countryman Electric JCW) எடிசன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மினி கண்ட்ரீமேன் ஜேசிடபிள்யூ எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.62 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் காரின் வேரியண்ட்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. புதிய ஜேசிடபிள்யூ எடிசன் ஆனது இந்த மினி எலக்ட்ரிக் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது இல்லாமல், எஸ்சென்ஷியல் (Essential), கிளாசிக் பேக் (Classic Pack), ஃபேவரட் பேக் (Favoured Pack) உள்ளிட்ட வேரியண்ட்களிலும் மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஒவ்வொரு வேரியண்ட்களிலும் ஒவ்வொரு விதமான ஆக்ஸஸரீகள் உடன் மற்ற வேரியண்ட்களில் இருந்து வேறுப்பட்டதாக மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் கார் கிடைக்கும்.
மினி நிறுவனத்தை நிறுவிய ஜான் கூப்பர் அவர்களின் நினைவாக கொண்டுவரப்படும் ஜேசிடபிள்யூ எடிசன்களில் அவற்றிற்கான பிரத்யேகமான அம்சங்கள் காருக்கு உள்ளேயும் வெளியேயும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் காரிலும் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை புதிய ஜேசிடபிள்யூ பேக் மூலமாக மினி நிறுவனம் மெருக்கேற்றியுள்ளது.
வழக்கத்தை காட்டிலும் அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பார்த்து பார்த்து கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் ஜேசிடபிள்யூ காரை மினி நிறுவனம் உருவாக்கியுள்ளதை அறிய முடிகிறது. வெறும் 20 கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் ஜேசிடபிள்யூ கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்ய மினி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த 20 கார்களும் முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, அங்கிருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவில் புக் செய்பவர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் புதிய கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் ஜேசிடபிள்யூ காரை மினி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ரூ.1.5 லட்சம் என்கிற டோக்கன் தொகையை செலுத்தி புக் செய்யலாம்.
விற்பனையில் இந்த மினி எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஏ (Mercedes-Benz EQA) காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.67.20 லட்சத்தில் இருந்தும், கியா இவி6 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.66 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன. இந்த பிரபலமான கார்களுடன் விற்பனையில் போட்டியாக விளங்கும் மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் ஜேசிடபிள்யூ காரை மிட்நைட் கருப்பு அல்லது லெஜண்ட் கிரே நிறத்தில் வாங்கலாம்.
இதில், லெஜண்ட் கிரே நிற ஆப்ஷனில் கருப்பு நிரத்திலான ஸ்ட்ரிப்ஸ் கிடைக்கும். வழக்கமான மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் காருடன் ஒப்பிடுகையில், புதிய ஜேசிடபிள்யூ வெர்சனில் அதற்கேற்ப பிரத்யேகமான கட்ட கட்டமான டிசைனை பெறலாம். எலக்ட்ரிக் கார் என்பதால், முன்பக்க கிரில் பகுதி மூடப்பட்டதாக உள்ளது. காரின் அலாய் சக்கரங்களும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மினி கார்கள் பெயருக்கேற்ப அளவில் சிறியவை; அதேநேரம் பவர்ஃபுல்லானவை. இதனாலேயே மினி கார்களை வாங்குவதற்கு என நம் நாட்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர் கூட்டம். அத்தகையவர்களை கவரும் முயற்சியாகவே தொடர்ச்சியாக ஜேசிடபிள்யூ கார்களை மினி நிறுவனம் களமிறக்கி வருகிறது. அந்த வகையில் களமிறக்கப்பட்டுள்ள கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் ஜேசிடபிள்யூ கார் இந்தியர்களை கவரும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








