காரின் அளவை பார்த்து எடை போடாதீங்க... எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் விலை எவ்வளவு தெரியுமா?

புதிய மினி கன்ட்ரிமேன் எஸ்.இ ஆல்4 (MINI Countryman SE All4) எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.66.90 லட்சம் ஆக நிர்ணயிக்கபட்டு உள்ளது. மினி நிறுவனத்தின் சில கார்களை போன்று JCW-தீம் கொண்ட இந்த புதிய கண்ட்ரிமேன் கார் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே உள்ள மினி கன்ட்ரிமேன் கார்களுடன் இணைந்துள்ள இந்த காருக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், உடனடியாக டெலிவரிகளும் துவங்கப்பட உள்ளன. கன்ட்ரிமேன் எஸ்இ ஆல்4 கார் இரட்டை மோட்டார் அமைப்பைப் பயன்படுத்துகிறது. இது 313hp ஆற்றலையும் 494Nm டார்க் திறனையும் வழங்குகிறது. பெட்ரோலில் இயங்கும் கன்ட்ரிமேன் JCW காரை விட இது அதிக சக்தி வாய்ந்தது.

mini countryman se all4 launch

ஏனெனில், பெட்ரோல் மாடல் அதிகப்பட்சமாக 300hp மற்றும் 400Nm டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலில் மட்டுமே இயங்குகிறது. மேலும், 204hp சிங்கிள் மோட்டார் கொண்ட வழக்கமான கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் காரையும் விட இது அதிக சக்தி, டார்க் திறனை வழங்குவது மட்டுமின்றி, ஆல்-வீல் டிரைவ் திறனையும் கொண்டுள்ளது.

இதனால், புதிய எஸ்இ ஆல்4 இந்தியாவில் விற்பனையில் உள்ள சக்திவாய்ந்த மினி காராக மாறியுள்ளது. இந்த ஆல்-வீல் டிரைவ் எலக்ட்ரிக் வாகனம், 0-100 கி.மீ வேகத்தை 5.6 வினாடிகளில் எட்டுகிறது. இதன் உச்சப்பட்ச வேகம் 180 கி.மீ ஆகும். இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டாருக்கு இயக்க ஆற்றலை வழங்க பொருத்தப்பட்டுள்ள 66.45kWh பேட்டரி ஆனது WLTP தரவுகளின்படி 440 கி.மீ வரை ரேஞ்ச் வழங்குகிறது.

mini countryman se all4 launch

இந்த காரின் பேட்டரியை 130kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 29 நிமிடங்களில் 10-80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். 22kW AC சார்ஜர் மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். 2025 கன்ட்ரிமேன் எஸ்இ ஆல்4 காரின் வெளித்தோற்றத்தில் மாற்றியமைக்கப்பட்ட கிரில், மேம்படுத்தப்பட்ட ஹெட்லேம்ப்கள், மெருகூட்டப்பட்ட பொனட், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் தனித்துவமான ஜெட் பிளாக் கூரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

JCW தோற்றத்தில் வெளிவரும் இந்த காரில், கருப்பு நிற ஸ்ட்ரைப்கள், ரூஃப் ரெயில்கள், 19 இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் வீல்-ஆர்க் கிளாடிங் ஆகியவை உள்ளன. லெஜண்ட் கிரே மற்றும் மிட்நைட் கருப்பு ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கிறது. இந்த இரண்டில் எந்த நிறத்தில் காரை தேர்வு செய்தாலும், காரின் மேற்கூரை மற்றும் மிரர் கேப்கள் ஜெட் பிளாக் நிறத்தில் கிடைக்கும்.

mini countryman se all4 launch

LED DRL-கள், ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்களில் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கக்கூடிய சிக்னேச்சர் மோட்கள் உள்ளன. உட்புறத்தில், எஸ்இ ஆல்4 ஆனது மினி JCW கார்களுக்கே உண்டான சிறப்பு ஸ்டீயரிங், இருக்கைகள் மற்றும் டிரிம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. காரின் கேபினில் பவர்டு டிரைவர் இருக்கை, மறுசுழற்சி செய்யப்பட்ட துணி லைனிங், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் பனோரமிக் கண்ணாடி மேற்கூரை ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

மினி நிறுவனத்தின் வட்ட வடிவிலான OLED டிஸ்பிளே காரினுள் டேஸ்போர்டின் மையத்தில் இடம்பெற்றுள்ளது. இது தவிர ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, வயர்லெஸ் ஃபோன் மிரரிங், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற அம்சங்களும் உள்ளன. பல ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் அடங்கும். ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ (BMW) குழுமத்தின் கீழ் செயல்படும் மினி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் JCW கார்கள் இந்தியாவில் அவ்வப்போது அறிமுகம் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் ஒன்றாக புதிய கண்ட்ரிமேன் எஸ்இ ஆல்4 எலெக்ட்ரிக் காரை நாம் எடுத்துக் கொண்டாலும், மற்ற கண்ட்ரிமேன் கார்களை காட்டிலும் இது ஆற்றல்மிக்கது என்பதை மறந்துவிட வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 7, 2025, 20:39 [IST]
English summary
Mini india launches countryman se all4 electric car in india price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X