கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது... கார் பார்க்க தான் சிறுசு, விலை எவ்வளவாக நிர்ணயிக்க போறாங்களோ!!

புதிய மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் (MINI Cooper Convertible) காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் இன்று (நவம்பர் 19) தொடங்கப்பட்டுள்ளன. இந்த காம்பெக்ட் கன்வெர்ட்டிபிள் கார் 2025 டிசம்பருக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று மினி இந்தியா அறிவித்துள்ளது. இதற்கிடையில்தான் இந்த காருக்கான முன்பதிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

புதிய மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள், அதன் தனித்துவமான வடிவமைப்பால் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறந்தவெளி பயண அனுபவத்தை விரும்புவோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கார், பிரிட்டிஷ் அழகியலுடன் நவீன தொழில்நுட்பங்களையும் ஒருங்கே கொண்டுள்ளது. ஸ்டைல், செயல்திறன் மற்றும் பல்துறைத்திறன் ஆகியவற்றின் சரியான கலவையாக இது பார்க்கப்படுகிறது.

cooper convertible pre-bookings open

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மினி கூப்பர் எஸ் காரின் அடிப்படையிலான இந்த புதிய மாடலின் முக்கிய அம்சம், அதன் முழு எலக்ட்ரிக் சாஃப்ட் டாப் ஆகும். மணிக்கு 30 கிமீ வேகத்தில் வெறும் 18 வினாடிகளில் காரின் மேற்கூரையைத் திறந்து மூட முடியும். திறந்தவெளி அனுபவத்தை தடையின்றி பெற இது உதவுகிறது. மேலும், மேம்பட்ட இணைப்பு அம்சங்கள், தனிப்பயனாக்கக்கூடிய உட்புறம் மற்றும் சக்திவாய்ந்த என்ஜின் ஆகியவை இந்த காரின் சிறப்பம்சங்களாகும்.

புதிய மினி கூப்பர் கன்வெர்டிபிள் காரின் முன்பக்கம் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எண்கோண வடிவ கிரில்லின் மையப்பகுதி கவர்ச்சிகரமாக மூடப்பட்டு, மேற்புறத்தில் கிடைமட்டமாக கருப்பு நிற எலிமென்ட்களும், 'S' பேட்ஜும், என்ஜினை குளிர்விப்பதற்கான காற்று உள்ளே செல்வதற்கு அகலமான ஏர் டேம்களும் உள்ளன.

cooper convertible pre-bookings open

புதிய மினி கூப்பர் கன்வெர்டிபிள், அதன் ஹார்ட் டாப் மாடலான கூப்பர் எஸ் காரின் அதே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. காரின் பக்கவாட்டில் 17 இன்ச் டூயல் டோன் அலாய் சக்கரங்கள் மற்றும் காரின் முழு நீளத்திற்கும் கருப்பு நிற கிளாடிங் ஆகியவை உள்ளன. இதில் வீல் ஆர்ச்சுகளும் அடங்கும்.

பின்பகுதியில், யூனியன் ஜாக் பேட்டர்ன்களுடன் கூடிய எல்இடி டெயில் லேம்ப்கள் நீள்வட்ட வடிவில் அமைந்துள்ளன. கூப்பர் எஸ் காரில் இது முக்கோண வடிவத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பம்பர்கள் டூயல் டோன் பினிஷில் காணப்படுகின்றன. டெயில்கேட்டின் மையத்தில் மினி நிறுவனத்தின் லோகோவும், அதற்குக் கீழே கூப்பர் எஸ் பிராண்டிங்கும் மிளிர்கின்றன.

cooper convertible pre-bookings open

புதிய மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் காரை முன்பதிவு செய்ய விரும்புவோர், இரண்டு வழிகளில் முன்பதிவு செய்யலாம். அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மினி டீலர்ஷிப்களை நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது www.mini.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் முன்பதிவு கோரிக்கையைச் சமர்ப்பிப்பதன் மூலமோ இதைச் செய்யலாம். ஆன்லைன் முன்பதிவிற்குப் பிறகு, டீலர் பிரதிநிதி ஒருவர் உங்களைத் தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இந்தியாவில், மினி நிறுவனம் முக்கிய நகரங்களில் பத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களைக் கொண்டுள்ளது. அவை: டெல்லி, குருகிராம் (Bird Automotive), புனே (Bavaria Motors), கொச்சி (EVM Autokraft), அகமதாபாத் (Gallops Autohaus), மும்பை (Infinity Cars), சண்டிகர் (Krishna Automobiles), சென்னை, ஹைதராபாத், பெங்களூரு (KUN Exclusive) மற்றும் கொல்கத்தா (OSL Prestige) ஆகியவையாகும்.

cooper convertible pre-bookings open

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மினி கன்வெர்ட்டிபிள், இந்தியாவின் பிரீமியம் காம்பாக்ட் கன்வெர்ட்டிபிள் பிரிவில் நுழைகிறது. ஒரு சிறிய வடிவமைப்பிலான காரில், மேற்கூரையை திறந்தப்படி கார் ஓட்டும் அனுபவத்தை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையும். டிசம்பர் அறிமுக தேதியில் காரின் விலை, மற்ற விவரக்குறிப்புகள் மற்றும் ஆக்ஸஸரீஸ் ஆப்ஷன்கள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 19, 2025, 22:50 [IST]
English summary
Mini india opens pre launch bookings for cooper convertible car check all details here
மேலும்... #mini #car booking #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X