தமிழ்நாட்டின் முதல் இ-எஸ்சிவி ஷோரூம்.. டிவிஎஸ் - மேந்த்ரா 2 பேரும் சேர்ந்து தயார் செய்திருக்காங்க..

தமிழகத்தைச் சேர்ந்த இரு முன்னணி நிறுவனங்கள் இணைந்து ஓர் சூப்பரான ஷோரூமை திறந்திருக்கின்றன. மோந்த்ரா எலெக்ட்ரிக் வாகனம் (Montra Electric Vehicle)-களுக்கான ஷோரூமே அதுவாகும். இந்த ஷோரூமை டிவிஎஸ் (TVS) நிறுவனத்துடனான கூட்டணியின் வாயிலாக திறந்திருக்கின்றது, மோந்த்ரா எலெக்ட்ரிக் நிறுவனம். ஆகையால், இந்த ஷோரூமின் பெயர் போர்டில் இரு பிராண்டுகளின் பெயரும் இடம் பெற்றிருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இதுவே, தமிழகத்தில் இந்த நிறுவனங்களும் இணைந்து இ-எஸ்சிவி (e-SCV) ரக வாகனங்களுக்காக திறக்கும் முதல் ஷோரூம் ஆகும்.

அதாவது, மின்சாரத்தில் இயங்கும் சிறிய வர்த்தக வாகனம் (Electric Small Commercial Vehicle)-களுக்கான முதல் ஷோரூம் ஆகும். சென்னை மாதாவரத்திலேயே இந்த ஷோரூம் திறக்கப்பட்டு இருக்கின்றது. இன்றே (மார்ச் 17) ஷோரூம் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மாநிலத்தின் முக்கிய பகுதிகள் முழுக்க ஷோரூம் பரப்பும் நோக்கிலேயே மோந்த்ரா எலெக்ட்ரிக் நிறுவனம் டிவிஎஸ் வெயிக்கிள் மொபிலிட்டி சொல்யூசன் உடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.

Montra first e-scv dealership in tamil nadu

புதிய விற்பனையகத்தில் புதிய வாகனங்களின் விற்பனை மட்டுமல்ல, சர்வீஸ், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஸ்பேர் பார்ட் விற்பனை உள்ளிட்ட சேவைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அத்துடன், இ-வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பையும் இந்த ஷோரூம் கொண்டிருக்கும் என ரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், பலதரப்பட்ட சேவையை இந்த ஒற்றை ஷோரூம் வாயிலாக மோந்த்ரா எலெக்ட்ரிக் வழங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மோந்த்ரா நிறுவனம் தன்னுடைய சிறிய வர்த்தக வாகன பிரிவின்கீழ் ஒரே ஒரு வாகன மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவியேடர் (Eviator) என்கிற மாடலையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்த ஒரு வாகனம் மட்டுமே தற்போது திறக்கப்பட்ட புதிய ஷோரூமில் தரிசனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதாவது, இந்த ஒற்றை மாடலை பிரபலப்படுத்தும் முயற்சியாகவே ஓர் தனி பெரிய ஷோரூமை மோந்த்ரா இவி தமிழகத்தில் திறந்திருக்கின்றது. இந்த வாகனத்தை அவ்வளவு சாதாரணமாக எடைப் போட்டு விட வேண்டாம். அட்வான்ஸ்டு அம்சங்கள் பலவற்றை தாங்கிய ஓர் எலெக்ட்ரிக் சிறிய வர்த்தக வாகனமே இந்த இவியேடர் ஆகும்.

ஓர் முழு சார்ஜில் இந்த வாகனத்தில் 245 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய வாகனத்தின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மோந்த்ரா நிறுவனம் 7 ஆண்டுகள் மற்றும் 2.5 லட்சம் கிமீ கூட்டப்பட்ட வாரண்டி திட்டத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டெலிவரி மற்றும் சரக்கு ஏற்றி செல்லும் பிரிவிற்கான சிறந்த மின்சார வாகனமாக இது ஆகும். இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 80 kW பவர் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதேபோல், இதன் பாடியும் மிக நீளமானதாக உள்ளது. 10.4 அடி நீளம் கொண்டதாகவே அது உள்ளது.

இதில் 1.7 டன் வரையிலான பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். ஃபுல்லாக லோடை ஏற்றினாலும் இதில் மணிக்கு 80 கிமீ வேகம் வரை பயணிக்க முடியும். இந்த வாகனத்தில் நவீன கால கார்களில் வழங்கப்படும் அம்சங்களும்கூட வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், கூகுள் மேப் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Take a Poll

இதுமட்டுமல்ல அடாஸ், இம்மொபிலைசர், ஓவர் தி ஏர் அப்டேட் வசதி, டிஜிட்டல் திரை, செல்போன் உடன் இணைப்பதற்கான 1எம் செயலி, ரிவர்ஸ் பார்க்கிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், சௌகரியமான ரைடு அனுபவத்திற்காக ஏசி, அட்வான்ஸ்டு 2 ஸ்டேஜ் பாராபோலிக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவையும் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான தேவையை சிறிய வர்த்தக வாகன பிரிவின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக மோந்த்ரா இந்த இவியேடர் வாகன மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

FAQs
மோந்த்ரா இவியேடர் விலை எவ்வளவு?

மோந்த்ரா இவியேடர் இந்தியாவில் ரூ. 16 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மோந்த்ரா இவியேடரை மட்டும்தான் இந்தியாவில் விற்பனைச் செய்கிறதா?

மோந்த்ரா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சா, டிராக்டர் மற்றும் ரைனோ எனும் டிரக் ஆகியவற்றை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மோந்த்ரா இவியேடர் எத்தனை வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது?

இரண்டு விதமான வேரியண்டுகளிலேயே அது விற்பனைக்கு கிடைக்கின்றது. இவியேடர் இ-350எல் மற்றும் இவியேடர் இ-350எக்ஸ் ஆகியவையே அவை ஆகும்.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 9:40 [IST]
English summary
Montra electric expands with first e scv dealership in tamil nadu through tvs partnership
மேலும்... #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+