கார்களுக்கே டஃப் கொடுக்கும் பிரீமியம் லுக்.. வெளிநாட்டு நிறுவன தயாரிப்பை போலிருக்கும் இவை நம்ம ஊரு தயாரிப்பா!!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மோந்த்ரா எலெக்ட்ரிக் (Montra Electric). இந்த நிறுவனம் தற்போது நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-வை பயன்படுத்தி இரண்டு புதுமுக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஈவியேடர் (EVIATOR) மற்றும் சூப்பர் கார்கோ (Super Cargo) ஆகிய வாகனங்களையே அது அறிமுகம் செய்து இருக்கின்றது. இரண்டும் மின்சாரத்தில் இயங்கும் கமர்சியல் பயன்பாட்டு வாகனங்கள் ஆகும். ஈவியேடர் என்பது எலெக்ட்ரிக் சிறிய வர்த்தக பயன்பாட்டு வாகனம் (e SCV) ஆகும்.

Montra electric launches new cargo vehicles

சூப்பர் கார்கோ என்பது மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர வாகனம் (e 3-Wheeler) ஆகும். இந்த வாகனங்களையே நம்ப முடியாத திறன்களைத் தாங்கியதாக மோந்த்ரா எலெக்ட்ரிக் தயார் செய்திருக்கின்றது. குறிப்பாக, ஈவியேடரை அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 245 கிமீ ரேஞ்சை தரும் வாகனமாக தயார் செய்திருக்கின்றது.

நிஜ உலக பயன்பாட்டில் இந்த வாகனம் அதிகபட்சம் 170 கிமீ வரை ரேஞ்ச் தரும். இத்துடன், 80 kW மற்றும் 300 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரையும் மோந்த்ரா எலெக்ட்ரிக் வழங்கி இருக்கின்றது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக 7 ஆண்டுகள் அல்லது 2.5 லட்சம் கிமீ வாரண்டியை நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 15.99 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வழக்கமான லோடு வண்டிகளைவிட சற்று அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த சிறிய வர்த்தக பயன்பாட்டு மின்சார வாகனமாகக் இது காட்சியளிக்கின்றது. இதற்கு சான்றாக இதன் வெளிப்புற தோற்றம் இருக்கின்றது.

சொல்லப்போனால் கார்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பிரீமியம் லுக்கில் அது காட்சியளிக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக சூப்பர் கார்கோ இருக்கின்றது. இந்த மூன்று சக்கர எலெக்ட்ரிக் கார்கோவிற்கு ரூ. 4.37 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் 150 கிமீ வரை மட்டுமே ரேஞ்ச் தரும். இதனை மூன்று வெவ்வேறு விதமான உடல் தோற்றத்தில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக மோந்த்ரா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கின்றது. மேலும், இதை வெறும் 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்வதற்கான வசதியுடனும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

இந்த வாகனங்கள் வர்த்தக வாகன பிரியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப இந்த எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தில் டிரைவருக்கு சீல் பெல்ட், முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் அதிக இட வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார வர்த்தக வாகன பிரிவை முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும் என்கிற நோக்கிலேயே தமிழகத்தைச் சேர்ந்த மோந்த்ரா எலெக்ட்ரிக் இந்த இரண்டு வாகனங்களையும் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த வாகனங்களை மட்டுமல்ல மின்சாரத்தில் இயங்கும் கன ரக வர்த்தக 55 டன் டிரக்கான ரைனோ (Electric Heavy Commercial 55 Ton Truck RHINO)-வையும் அது காட்சிப்படுத்தியது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 17:06 [IST]
English summary
Montra electric launched new cargo vehicles at bharat mobility global expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+