தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு கிடைத்த மிகப் பெரிய ஆர்டர்.. ஒரே ஆளா வந்து 100 வாகனங்களை வாங்கிட்டாங்க!!

125 ஆண்டுகள் பழைமையான நிறுவனம் முருகப்பா குழுமம். இது ஓர் சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் நிதி, மின்சார வாகன உற்பத்தி என பலதுறைகளில் பங்களித்து இயங்கி வருகின்றது. மோந்த்ரா எலெக்ட்ரிக் (Montra Electric), எனும் பெயரிலேயே அது மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த பிராண்டின்கீழ் உற்பத்தி செய்யப்படும் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக ஈவியேட்டர் (Eviator) இருக்கின்றது. இந்த மாடலுக்கே அதிக எண்ணிக்கையில் ஆர்டர் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேஜந்தா மொபிலிட்டி (Magenta Mobility), நிறுவனமே மிகப் பெரிய எண்ணிக்கையில் ஈவியேட்டருக்கு ஆர்டர் கொடுத்திருக்கின்றது. 100 யூனிட் ஈவியேட்டர் இ350எல் மாடலுக்கே ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஈவியேட்டர் ஓர் குட்டியானை என்றழைக்கப்படும் டாடா ஏஸ்-ஐப் போன்ற மினி லோடு எலெக்ட்ரிக் வண்டி ஆகும்.

Montra electric supplies 100 eviator e350l to magenta mobility

சரக்குகளைக் கையாள்வதற்க என்றே பிரத்யேகமாக இதனை மோந்த்ரா எலெக்ட்ரிக் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதையே நூறு யூனிட்டுகள் வரை மேஜந்தா மொபிலிட்டி தற்போது வாங்கி இருக்கின்றது. மேஜந்தா மொபிலிட்டி, இது ஓர் மின்சார வாகனங்களைக் கொண்டு சரக்குகளை உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் (Logistics) பணியை மேற்கொண்டு வரும் நிறுவனம் ஆகும்.

உதாரணமாக, இ-காமர்ஸ், தொலைத்தொடர்பு செயல்பாடு உள்ளிட்ட சேவைகளில் அது ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே அது 100 புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை தன்னுடைய சேவையில் இணைக்க முன் வந்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே இந்த ஆர்டரையும் அது சென்னையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கி இருக்கின்றது.

Montra electric eviator e350l front view

சான்றளிப்பின்படி இந்த வாகனம் ஓர் முழு சார்ஜில் 245 கிமீ ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகின்றது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் இது அதிகபட்சமாக 170 கிமீ வரை மட்டுமே ரேஞ்சை தரும். இத்துடனேயே 80 kW மற்றும் 300 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரை ஈவியேட்டரில் மோந்த்ரா எலெக்ட்ரிக் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

இதில் மட்டுமல்ல அதிக லோடை ஏற்றிச் செல்வதற்கு ஏற்ற வாகனமாகவும் இது காட்சியளிக்கின்றது. 10.4 அடி நீளத்திலேயே பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான பாடி அமைப்பை இதில் மோந்த்ரா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதில் 1.7 டன் வரையிலான எடைக் கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும்.

Montra electric eviator e350l payload body

என்னதான் இந்த வாகனம் சரக்குகளைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டு இருந்தாலும், அதில் பிரீமியம் அம்சங்களை வழங்கக் கொஞ்சம் கூட தவறவில்லை. அந்தவகையிலேயே முன் பக்கத்தில் டிரைவருடன் சேர்த்து இருவர் அமர்ந்துச் செல்கின்ற மாதிரியான பிரீமியம் இருக்கை வழங்கப்பட்டு இருக்கின்றது. ஏசி வசதியும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இத்துடன், எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்டர், அகலமான விண்ட்ஷீல்டு உள்ளிட்டவற்றை வழங்கி இருக்கின்றனர். இதுமட்டுமல்ல கூகுள் மேப், அடாஸ் அம்சம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் போர்ட், இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் அட்வான்ஸ்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றையும் இந்த வாகனத்தில் வழங்கி இருக்கின்றனர்.

Montra electric eviator e350l side view

இதுபோன்று நவீன கால மின்சார கார்களுக்கு இணையான அம்சங்கள் பலவற்றை ஈவியேட்டர் எலெக்ட்ரிக் லோடு வண்டியில் மோந்த்ரா நிறுவனம் வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய வாகனத்தையே மிகப் பெரிய எண்ணிக்கையில் வாங்குவதற்காக தற்போது மேஜந்தா மொபிலிட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. தனிநபர் பயன்பாட்டில் மட்டுமல்ல பொதுச்சேவையிலும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மேஜந்தா நிறுவனமும் அதிக எண்ணிக்கையில் மின்சார வாகனங்களுக்கு தற்போது ஆர்டர் கொடுத்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 21, 2025, 18:53 [IST]
English summary
Montra electric to supply 100 eviator e350l ev to magenta mobility for enhanced green logistics
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X