1 கி.மீக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக தான் செலாகும்! இந்த எலெக்ட்ரிக் சரக்கு ஆட்டோவை பற்றி தெரியுமா?
மோந்த்ரா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தயிாவில் குறைந்த விலையில்
எலெக்ட்ரிக் சரக்கு ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கம்பஷன் இன்ஜின் வாகனங்களுக்கு இணையான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
முருகப்பாஸ் குழுமம் சார்பில் நடத்தப்படும் நிறுவனம் தான் மோந்த்ரா எலெக்ட்ரிக் இந்நிறுவனம் 3 சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சூப்பர் கார்கோ என்ற பெயரில் லைஸ்ட் மைல் சரக்கு போக்குவரத்திற்கான வாகனத்தை உருவாக்கியுள்ளது. இந்த வாகனம் இன்று டில்லியில் அறிமுகமாகியள்ளது.

இந்த சூப்பர் கார்கோ எலெக்ட்ரிக் சரக்கு ஆட்டோவில் 13.8 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இது 200 கி.மீ ரேஞ்ச் தரும் என சான்றழிக்கப்பட்டுள்ளது. இது ரியல் வேல்டில் 170 கி.மீ ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் ரூ4.37 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த வாகனத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 10 என கணக்கிட்டால் கூட 138 ரூபாய் வரும். அப்படி பார்த்தால் ஒரு கி.மீ ஒரு ரூபாயையும் விட குறைவான விலையில் விற்பனையாகிறது.
இந்த வாகனம் 5 ஆண்டுகள் அல்லது 1.75 லட்சம் கி.மீ வராண்டியை வழங்குகிறது. இது 3 விதமான பாடி டைப்களில் வருகிறது. அதன்படி 170 கியூபிக் பீட், 140 கியூபிக் ஃபீட் மற்றும் டிரே டெக் ஆகிய பாடி டைப்களில் கிடைக்கிறது. மேலும் இதில் 2 விதமான வேரியன்ட்கள் உள்ளன. அதன்படி டிரே இக்யூஎக்ஸ் மற்றும் 170 கியூபிக் ஃபீட் இக்யூ எக்ஸ் டி+ ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 70 என்எம் டார்க் திறனையும் 11 கிலோ வாட் பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 1.2 டன் அளவிலான சரக்குகளை ஏற்றி செல்ல முடியும். இதன் முன்பக்க வீல்களில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இது போக ஹில் ஹோல்டு, ரிவர்ஸ் அசிஸ்ட், சீட்பெல்ட், ரீஜெனரட்டிவ் பிரேக்கிங், பல்வேறு டிரைவ்மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனம் போரன் ஸ்டீல் சேஸிஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 6.2 அடி நீள லோடு டிரே வழங்கப்பட்டுள்ளது. இது தனியாக வாகனம் வாகனம் வாங்கி பயன்படுத்துபவர்கள், அதிக வாகனம் வாங்கி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்துபவர்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை தற்போது மோந்த்ரா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ள 90 நகரங்களில் புக்கிங் செய்யப்படும். இந்நிறுவனம் சில்லி ரெட், ஸ்டீல் கிரே, இந்தியன் ப்ளூ, ஸ்டாலின் பிரெளன் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த வாகனம் நிச்சயம் சரக்கு வாகன உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சரக்கு வாகனங்கள் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக இருக்கிறது.இந்நிலையில் குறைந்த செலவில் போக்குவரத்து என்பது இந்தியாவில் மிக முக்கிய தேவையாக இருக்கிறது. இந்த தேவையைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications