5 பேர் போகுறதுக்கு கணக்கச்சிதமான இந்த மாருதி காருக்கு தான் செம்ம டிமாண்ட்! மைலேஜ் அதிகமா தருவதுதான் காரணம்!!
நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்கள் மற்றும் தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் ரக கார்கள் உள்ளிட்டவை இருந்தாலும், ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களுக்கு மக்களிடம் எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. விலை குறைவான பல கார்கள் ஹேட்ச்பேக் உடலமைப்பையே கொண்டுள்ளன.
எஸ்யூவி மற்றும் செடான் என இரண்டும் கலந்த கலவை தான் ஹேட்ச்பேக் கார்களாகும். இந்தியாவில் பல்வேறு விதமான ஹேட்ச்பேக் கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டாலும், அவற்றுள் கடந்த 2025 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கடந்த ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் காராக முதலிடத்தில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஸ்விஃப்ட் (Swift) கார் உள்ளது. முதலிடத்தில் மட்டுமின்றி, இந்த வரிசையில் முதல் மூன்று இடங்களை மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களே பிடித்துள்ளன. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 275 ஆகும்.
அதுவே கடந்த 2024 ஜூன் மாதத்தில் 16 ஆயிரத்து 422 ஸ்விஃப்ட் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 19% குறைந்துள்ளது. ஸ்விஃப்ட் காருக்கு அடுத்து கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் காராக 2வது இடத்தில் வேகன்ஆர் (WagonR) 12 ஆயிரத்து 930 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

வேகன்ஆர் காரும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சற்று அதிகமாக 13 ஆயிரத்து 790 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார், பலேனோ (Baleno) ஆகும். மேலே குறிப்பிடப்பட்ட ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் சற்று விலைமிக்கதான பலேனோ கடந்த மாதத்தில் 8 ஆயிரத்து 966 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது 2024 ஜூனில் விற்பனை செய்யப்பட்ட பலேனோ கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 40% குறைவாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 14 ஆயிரத்து 895 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 4வது மற்றும் 5வது இடங்களில் முறையே டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ (Alto) கார்கள் முறையே 6,032 மற்றும் 5,045 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.

இதில், ஆல்டோ கார்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 7,775 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 6வது மற்றும் 7வது இடங்களில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Grand i10 Nios) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார்கள் முறையே 4,237 மற்றும் 3,974 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. இந்த லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் ஹூண்டாய் ஐ20 (3,785), டொயோட்டா கிளான்ஸா (2,938) மற்றும் மாருதி சுஸுகி செலிரியோ (2,038) கார்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்கள் மார்க்கெட் ஆனது பலத்த போட்டி மிகுந்தது ஆகும். இதனால்தான், இந்த சந்தையின் நிலவரம் அவ்வப்போது ஏற்ற இறக்கமாக உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது, ஹேட்ச்பேக் கார்கள் மார்க்கெட்டில் ஆகும். இது கடந்த ஜூன் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications









