அடிமாட்டு விலையிலான இந்த கார்களுக்கு தான் கஸ்டமர்ஸ் குவியுறாங்க! 10 லட்ச ரூபாய்க்குள் இதில் ஒன்றை வாங்கிடலாம்!

ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டின் விற்பனைத் தரவுகளின்படி, இந்திய கார் சந்தையில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள வாகனங்கள் வழக்கம்போல் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) தனது சந்தைத் தலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறது.

அதேநேரம், டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் கார்களும் இந்த விலை பிரிவில் வலுவான விற்பனையைப் பதிவு செய்துள்ளன. அந்த வகையில், நடந்து முடிந்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிகம் விற்பனையாகும் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

most sold cars in august

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga): மாருதி சுஸுகியில் இருந்து மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக இந்தியாவிலேயே அதிக பேர் வாங்கும் எம்பிபி காராக எர்டிகா விளங்குகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 18,445 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.12 லட்சத்தில் இருந்து துவங்கி சில வேரியண்ட்களின் விலைகள் ரூ.10.00 லட்சத்திற்கும் அதிகமான உள்ளன.

most sold cars in august

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): மாருதி சுஸுகியின் காம்பாக்ட் செடான் காராக விளங்கும் டிசையர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 16,509 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. டிசையரின் ஆரம்ப நிலை வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.84 லட்சம் முதல் ரூ.9.64 லட்சம் வரை உள்ளன.

most sold cars in august

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR): மாருதி சுஸுகியின் பிரபலமான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக விளங்கும் வேகன்ஆர் ஆனது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் லிஸ்ட்டில் 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14,552 யூனிட்கள் விற்பனையாகி உள்ள வேகன்ஆர் கார் ரூ.5.79 லட்சம் முதல் ரூ.7.62 லட்சம் வரையிலான விலைகளில் கிடைக்கிறது.

most sold cars in august

டாடா நெக்ஸான் (Tata Nexon): கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் லிஸ்ட்டில் நெக்ஸான் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14,004 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்குள் நெக்ஸானின் சில வேரியண்ட்கள் ரூ.8.00 லட்சம் முதல் ரூ.10.00 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கின்றன.

most sold cars in august

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மாருதி சுஸுகியின் பிரிமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான பலேனோ கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் லிஸ்ட்டில் 7வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 12,549 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்திற்குள் பலேனோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.74 லட்சம் முதல் ரூ.9.96 லட்சம் வரை தற்சமயம் உள்ளன.

most sold cars in august

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிரான்க்ஸ் ஆனது கடந்த ஆகஸ்ட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் லிஸ்ட்டில் 8வது இடத்தை பிடித்துள்ளது. சில வேரியண்ட்கள் ரூ.7.58 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சத்திற்குள்ளான விலைகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்த மாதத்தில் 12,422 ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்களில் 8 கார்கள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைப்பவை ஆகும். அந்த 8 கார்களுள் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 6 கார்களை தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். கடந்த மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட கார்கள் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால், அதில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Swift), ஈக்கோ (Eeco) மற்றும் டாடா பஞ்ச் (Tata Punch) கார்களும் அடங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, September 15, 2025, 5:00 [IST]
English summary
Most sold cars in august 2025 which priced under rupees 10 lakhs maruti suzuki ertiga and dzire
மேலும்... #car sales #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X