மாருதி காருக்கு முன்ன டாடா கார் இருக்கும்னு எதிர்பார்க்கல! 10 லட்ச ரூபாய் கார்கள் லிஸ்ட்!
இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் வேரியண்ட்களைக் கொண்ட கார்களில் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானவற்றில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்களின் கார் மாடல்கள் முன்னிலை வகிக்கின்றன. பண்டிகைக் காலம் மற்றும் சரக்கு & சேவை வரி (GST 2.0) சலுகைகள் இந்திய கார் சந்தைக்கு உத்வேகம் அளித்துள்ளன.

டாடா நெக்ஸான் (Nexon): கடந்த நவம்பர் மாதம் 22,000 நெக்ஸான் கார்களுக்கு மேல் விற்பனையாகி, இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.7.32 லட்சம் முதல் ரூ.14.15 லட்சம் வரை தற்சமயம் உள்ளன. அதாவது, இதன் சில வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டை தாண்டுகின்றன.

மாருதி சுஸுகி டிசையர் (Dzire): நெக்ஸானை போல், கடந்த மாதத்தில் சுமார் 21,000 யூனிட்டுகளுக்கும் மேல் விற்பனையுடன் இரண்டாம் இடத்தை இந்த மாருதி சுஸுகி செடான் கார் பிடித்துள்ளது. டிசையர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.26 லட்சம் முதல் ரூ.9.31 லட்சம் வரை உள்ளன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Swift): மேலே கண்ட டிசையர் காரின் ஹேட்ச்பேக் வெர்சனான ஸ்விஃப்ட், டிசையரை போலவே தொடர்ந்து அதிக விற்பனையைப் பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 19,733 யூனிட்கள் விற்பனை உடன் அதிகம் விற்பனையான கார்கள் லிஸ்ட்டில் 3வது இடத்தை பிடித்துள்ள ஸ்விஃப்ட்டின் விலைகள் ரூ.5.79 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் வரை உள்ளன.

டாடா பன்ச் (Punch): நெக்ஸான் அளவிற்கு இல்லையென்றாலும், மைக்ரோ-எஸ்யூவி கார்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக பன்ச் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், கடந்த 2024ஆம் ஆண்டில் சில மாதங்களில் தொடர்ச்சியாக இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக பன்ச் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் 18,753 யூனிட்கள் விற்பனையாகி உள்ள இந்த டாடா காரின் விலைகள் ரூ.5.50 லட்சம் முதல் ரூ.9.30 லட்சம் வரை உள்ளன.

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Fronx): கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு இந்திய சந்தையில் பிரபலமான கிராஸ்ஓவர் கார் மாடலாக இது உருவெடுத்துள்ளது. கடந்த நவம்பரில் 15,058 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள ஃபிரான்க்ஸ் காரின் விலைகள் ரூ.6.85 லட்சம் முதல் ரூ.11.98 லட்சம் வரை உள்ளன.

மாருதி சுஸுகி வேகன் ஆர் (WagonR): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாகத் திகழும் இதன் ஆரம்ப விலை ரூ.4.99 லட்சம் முதல் ரூ.6.84 லட்சம் வரை தற்சமயம் உள்ளது. மற்ற ஹேட்ச்பேக் கார்கள் போன்று இல்லாமல், உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் காராக இருப்பதினாலேயே வேகன்ஆருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான கார்கள் லிஸ்ட்டில் 11வது இடத்தை பிடித்துள்ள பலேனோ, பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 13,784 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.10 லட்சம் வரை உள்ளது.

மாருதி சுஸுகி ஈக்கோ (Eeco): இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் ஒரேயொரு வேன் மாடலான ஈக்கோ, பொருட்களை ஏற்றி செல்ல கமர்ஷியல் பயன்பாட்டிற்கும் விற்பனைக்கு கிடைக்குறது. மேலே கண்ட பலேனோவுக்கு அடுத்து 13,200 யூனிட்கள் விற்பனை உடன் உள்ள ஈக்கோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.21 லட்சத்தில் இருந்து ரூ.6.36 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் இன்னும் பல கார்கள் கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அவற்றுள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 8 கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இவற்றுள் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









