குறிப்பா இந்த ஒரு மாருதி காரை மட்டும் போட்டி போட்டு வாங்குறாங்க! விலை எல்லாம் அதேதான்!

2025 அக்டோபரில், இந்தியச் சந்தையில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் அதிக விற்பனையான செடான் கார் மாருதி சுஸுகி டிசையர் ஆகும். ஹூண்டாய் அவ்ரா மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய கார்கள் இந்த வரிசையில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருந்தாலும், டிசையரின் விற்பனை எட்டா தூரத்தில் உள்ளது. 2025 அக்டோபரின் விற்பனைத் தரவுகளின்படி, ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனையில் உள்ள செடான் கார்களின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கைகளை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): 2025 அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான செடான் காராக டிசையர் முதலிடத்தை பிடித்துள்ளது. கட்ந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிசையர் கார்களின் எண்ணிக்கை 20,791 யூனிட்கள் ஆகும். அனைத்து விதமான கார்களையும் சேர்த்தால், இந்தியச் சந்தையின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் டிசையர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

under 10 lakh rupee sedan cars sales in october

இந்த மாருதி சுஸுகி செடான் கார் அதன் எரிபொருள் சிக்கனம் (பெட்ரோல் வேரியண்ட்களில் 25.71 கிமீ/லிட்டர் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களில் 33.73 கிமீ/கிலோ) மற்றும் விசாலமான & வசதியான உட்புற அமைப்புக்காகப் பாராட்டப்படுகிறது. இதன் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் ஆறு ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

under 10 lakh rupee sedan cars sales in october

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): இந்த ஹூண்டாய் செடான் கார், இந்த வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், டிசையரை விட மிகவும் குறைவாக 5,379 அவ்ரா கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சிறப்பான மதிப்பு மற்றும் நடைமுறை வடிவமைப்புக்காக அவ்ரா அறியப்படுகிறது. இந்த காரில் அதிக இடவசதி, போதுமான லெக்ரூம் மற்றும் கணக்கச்சிதமான டேஷ்போர்டு அமைப்பு உள்ளது.

under 10 lakh rupee sedan cars sales in october

ஹோண்டா அமேஸ் (Honda Amaze), நம்பகமான என்ஜின் மற்றும் மென்மையான டிரைவிங் அனுபவத்திற்காக அறியப்படுகிறது. அவ்ரா அளவிற்கு கூட இல்லையென்றாலும், 3,630 யூனிட்கள் விற்பனை உடன் இதுவும் இந்த பிரிவில் கணிசமான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. ஸ்டைலான வடிவமைப்பு, வசதியான உட்புறம் மற்றும் நம்பகமான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆகியவற்றுக்காக இது மார்க்கெட்டில் பிரபலமானதாக உள்ளது.

under 10 lakh rupee sedan cars sales in october

டாடா டிகோர் (Tata Tigor): இந்த டாடா செடான் கார் அதன் தனித்துவமான கூபே போன்ற ஸ்டைலிங் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காகப் பிரபலமான தேர்வாக உள்ளது. உறுதியான கட்டுமானம், விசாலமான கேபின் மற்றும் பெரிய பூட் ஆகியவற்றை கொண்ட டிகோர் கடந்த மாதத்தில் 1,196 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஸ்டைலான தோற்றம், வெளிப்புறத்தில் சுற்றிலும் குரோம் ஹைலைட்கள் மற்றும் புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

under 10 lakh rupee sedan cars sales in october

மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz): இந்த காரின் சில வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டை மீறினாலும், இதன் குறைந்த மற்றும் நடுத்தர வேரியண்ட்கள் இந்த விலைக்குள் வருகின்றன. சியாஸ், அதன் பிரீமியம் தரத்திலான வடிவமைப்பிற்காக அறிய முடிகிறது. இருப்பினும், மாருதி சுஸுகியில் இருந்து அதிகம் விற்பனையாகாத மிகவும் சில கார்களுள் ஒன்றாக விளங்கும் சியாஸ், கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் செடான் கார்களின் விற்பனை இந்தியாவில் மிகவும் குறைந்துவிட்டது. இருப்பினும், மாருதி சுஸுகி நிறுவனம் மட்டும் அதன் டிசையர் செடான் காரை ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 20 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகிறது. ஜிஎஸ்டி குறைப்பால், கடந்த அக்டோபர் மாதத்தை போலவே வரும் மாதங்களிலும் செடான் கார்கள் விற்பனை ஓரளவிற்கு சுமாராக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 17, 2025, 5:00 [IST]
English summary
Most sold sedan cars in october 2025 priced under 10 lakh rupees maruti suzuki dzire on top
மேலும்... #car sales #sedan car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X