சேல்ஸ் ரிப்போர்ட் சொல்லுது... 10 லட்ச ரூபாய்க்குள் பலரும் இதில் ஒரு காரை வாங்க தான் ஷோரூமுக்கு வராங்க!

2025 அக்டோபரில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையுள்ள கார்களில், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் சில பிரபலமான கார் மாடல்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளன. அதன்படி பார்க்கும்போது, கடந்த 2024ஆம் ஆண்டின் இதே அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இதில் சில கார்கள் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியை கண்டுள்ளன.

most sold suv cars priced 10 lakh rupee cars

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): மாருதி சுஸுகியின் காம்பாக்ட் செடான் ரக காரான இது, 2025 அக்டோபரில் 20 ஆயிரத்து 791 யூனிட்கள் விற்பனையாகி, வலுவான விற்பனையை வெளிப்படுத்தியுள்ளது. 2024 அக்டோபரில் 12 ஆயிரத்து 698 டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் டிசையரின் விற்பனை 64% அதிகரித்துள்ளது. ரூ.10 லட்சம் விலைக்குள் பல வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் டிசையர், நம்பகமான மற்றும் எரிபொருள் சிக்கனமான செடான் ஆக விளங்குகிறது.

most sold suv cars priced 10 lakh rupee cars

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR): இந்த மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார் அதன் நடைமுறை அம்சங்கள் மற்றும் விசாலமான உட்புறத்திற்குப் பெயர் பெற்றது. 2025 அக்டோபரில் 18 ஆயிரத்து 970 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த கார், 2024 அக்டோபரில் 13 ஆயிரத்து 922 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, வேகன்ஆரின் விற்பனை 36% அதிகரித்துள்ளது.

most sold suv cars priced 10 lakh rupee cars

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார், 2025 அக்டோபரில் 16 ஆயிரத்து 873 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்த 16 ஆயிரத்து 82 பலேனோ கார்கள் உடன் ஒப்பிடுகையில், 5% அதிகமாகும். விசாலமான கேபின் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த காராக, பலேனோ தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

most sold suv cars priced 10 lakh rupee cars

டாடா பன்ச் (Tata Punch): டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி காரான இது 2025 அக்டோபரில் 16 ஆயிரத்து 810 யூனிட்கள் விற்பனையாகி, பிரபலமான தேர்வாகத் திகழ்கிறது. 2024 அக்டோபரில் விற்பனையான 15 ஆயிரத்து 740 பன்ச் கார்களை விட இது 7% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. அளவில் சிறியதான எஸ்யூவி தோற்றமும், அதிக பாதுகாப்பு மதிப்பீடுகளும் இதை ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் பலரும் விரும்பும் காராக மாற்றியுள்ளன.

most sold suv cars priced 10 lakh rupee cars

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): மாருதி சுஸுகியின் கிராஸ்ஓவர் காரான இது 2025 அக்டோபரில் 17 ஆயிரத்து 3 யூனிட்கள் விற்பனையாகி விற்பனையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2024 அக்டோபரிலும் 16 ஆயிரத்து 419 ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் ஃபிரான்க்ஸ் கார்களின் விற்பனை 4% அதிகரித்துள்ளது. கூபே-எஸ்யூவி தோற்றத்தில் சிஎன்ஜி (CNG) மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் ஃபிரான்க்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

most sold suv cars priced 10 lakh rupee cars

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): ஸ்போர்ட்டியான தோற்றத்திற்காக இந்தியாவில் நீண்ட காலமாக பலரால் விரும்பப்படும் ஹேட்ச்பேக் காரான இது, 2025 அக்டோபரில் 15 ஆயிரத்து 542 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. எனினும், இது 2024 அக்டோபரில் விற்பனையான 17 ஆயிரத்து 539 யூனிட்களை விட 11% சரிவைக் காட்டுகிறது. இவ்வாறு சரிவு இருந்தபோதிலும், இது ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் காராக உள்ளது.

most sold suv cars priced 10 lakh rupee cars

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திராவின் காம்பாக்ட் எஸ்யூவி காரான இது, 2025 அக்டோபரில் 12 ஆயிரத்து 237 யூனிட்கள் விற்பனையாகி சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. இது, 2024 அக்டோபரில் 9 ஆயிரத்து 562 யூனிட்கள் என்ற நிலையில் இருந்து 28% அதிகரிப்பாகும். இது காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் இந்த மஹிந்திரா காரின் அதிகரித்து வரும் புகழ் மற்றும் போட்டித்தன்மையை காட்டுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவற்றுடன், கடந்த அக்டோபர் மாதத்தில் 11 ஆயிரத்து 738 ஹூண்டாய் வென்யூ கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ரெனால்ட் டிரைபர் காரும் 7 இருக்கைகள் உடன், மலிவு விலையில் பெரிய குடும்பங்களுக்கான பிரபலமான தேர்வாகத் தொடர்கிறது. இந்த அளவிற்கு மாதத்திற்கு மாதம் போட்டி மிகுந்ததாக மாறிவரும் இந்தியாவின் எஸ்யூவி கார்கள் சந்தையில் ரூ.10 லட்சத்திற்குள் இதில் ஒரு சிறந்த காரை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 14, 2025, 5:00 [IST]
English summary
Most sold suv cars priced under 10 lakhs in india in october 2025 maruti suzuki dzire top on list
மேலும்... #suv car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X