கார் ஒவ்வொன்றும் பூ போல எடை குறைவா இருக்கும்! அன்னையர் தினத்தில் இதில் ஒரு காருடன் அம்மாவை சர்பிரைஸ் பண்ணுங்க!

அன்னையர் தினம் (Mother's Day), குடும்பத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஒவ்வொரு தாய்மார்களையும் பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடத்திலும் மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமையில் நினைவுக்கூரப்படும் அன்னையர் தினம் இந்த 2025ஆம் ஆண்டில் இன்று (மே 11) உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அன்னையரின் தியாகங்களையும், அர்பணிப்புகளையும் நினைவுக்கூரும் விதமாக கொண்டாடப்படும் இந்த அன்னையர் தினத்தில் உங்களது அம்மாவுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பிக்கலாம். அது சிறிய அளவிலான பரிசாக இருக்கலாம் அல்லது பல லட்ச ரூபாய் மதிப்பிலான காராக இருக்கலாம்.

குடும்பத்திற்கு அயராது உழைக்கும் அம்மாவுக்கு கார் வாங்கிக் கொடுக்க நீண்ட நாட்களாக யோசித்து வருகிறீர்கள் எனில், அதற்கு இந்த அன்னையர் தினம் சரியான நேரமாக இருக்கும். பெண்கள் உபயோகப்படுத்துவதற்கு என்று சில கார்கள் மிகவும் ஏற்றவை ஆக உள்ளன. இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் அத்தகைய கார்களுள் சிறந்த 6 கார்களை பற்றித்தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

best cars to gift mother

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவில் மிக பிரபலமான கார்களுள் ஒன்று, ஸ்விஃப்ட் ஆகும். குறைந்த விலையில், அளவில் சிறியதான காராக விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட்டில் 3-சிலிண்டர் இசட் சீரிஸ் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஏஎம்டி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 15 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.64 லட்சம் வரையில் உள்ளன.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் ரக காரை வாங்க விரும்புவோருக்கு அவ்ரா சரியான தேர்வாகும். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மக்களால் வாங்கப்படும் மிகவும் சில செடான் ரக கார்களுள் அவ்ரா ஒன்றாகும். இந்த ஹூண்டாய் செடான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.54 லட்சத்தில் இருந்து ரூ.9.11 லட்சம் வரையில் உள்ளன.

best cars to gift mother

மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio): சமீபத்தில் கார் ஓட்ட கற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்ற கார் செலிரியோ என்கிற ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும். அளவில் சிறியதான கார் என்பதால், பெண்களால் எளிதாக கண்ட்ரோல் செய்ய முடியும். செலிரியோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.64 லட்சத்தில் இருந்து ரூ.7.37 லட்சம் வரையில் உள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios): ஸ்டைலிஷான காரை விரும்பக்கூடிய பெண்களுக்கு கிராண்ட் ஐ10 நியோஸ் மிகவும் ஏற்ற கார் ஆகும். செலிரியோவை போலவே அளவில் சிறியதான மற்றும் எடை குறைவான கார் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகும். இந்த ஹூண்டாய் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.98 லட்சத்தில் இருந்து ரூ.8.62 லட்சம் வரையில் உள்ளன.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): கிராண்ட் ஐ10 நியோஸ் காரை காட்டிலும் அளவில் சிறியதான ஹூண்டாய் கார், எக்ஸ்டர் ஆகும். கிராண்ட் ஐ10 நியோஸ் ஆனது ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். ஆனால், எக்ஸ்டர் ஆனது நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். இதனால், எக்ஸ்டரில் சாலையின் பார்வையை இன்னும் நன்றாக பெறலாம். எக்ஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10.51 லட்சம் வரையில் உள்ளன.

சிட்ரோன் சி3 (Citroen C3): இதுவரையில் நாம் பார்த்த கார்களை காட்டிலும் ஸ்டைலிஷான காரை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், சிட்ரோன் சி3 மிகவும் ஏற்ற கார் ஆகும். பிரெஞ்சு-ஸ்டைல் காரான இது சில வருடங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிட்ரோன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.23 லட்சத்தில் இருந்து ரூ.10.19 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெண்களால் எந்தவொரு காரையும் ஓட்ட முடியும். விமானத்தை ஓட்டக்கூடிய பெண் விமானிகள் கூட அதிக எண்ணிக்கையில் வந்துவிட்டனர். இருப்பினும், வயதான அம்மா பயன்படுத்துவதற்கு, அதற்கேற்ப கார் ஏற்றதாக இருக்க வேண்டும் அல்லவா... அத்தகைய பயன்பாட்டிற்கு இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள கார்கள் மிகவும் ஏற்றவையாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, May 11, 2025, 5:00 [IST]
English summary
Mothers day special best cars for women drivers in india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+