லாரி மாதிரி எத்தனை பேரை வேண்டுமானாலும் உள்ளே ஏத்திட்டு போகலாம்! 10 லட்ச ரூபாய்க்கு குறைவாகவே இத்தனை கார்களா?

இந்தியாவில் ஏழு இருக்கைகள் கொண்ட கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏனெனில், அதிக பேருடன் குடும்பமாக தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வதற்கு அதிக இருக்கை வசதிகள் கொண்ட கார்கள் தேவைப்படுகின்றன. இதனாலேயே, சமீப காலங்களில் 7 இருக்கைகள் உடன் புது, புது கார்களை அறிமுகம் செய்ய கார் நிறுவனங்களும் விரும்புகின்றன.

இவ்வாறு, 7 இருக்கைகள் உடன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் கார்கள் பெரும்பாலும் எம்பிவி (MPV) ரக கார்களாகவே இருக்கின்றன. எஸ்யூவி (SUV) ரக கார்களை காட்டிலும் எம்பிவி கார்கள் அளவில் பெரியதாக உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு, இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த ஏழு இருக்கைகள் கொண்ட எம்பிவி கார்களையும், அவற்றின் சிறப்பம்சங்களை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

mpv cars under 10 lakh rupees

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): இது ஒரு மலிவு விலை எம்பிவி கார் ஆகும். சவுகரியமான இருக்கை அமைப்பு மற்றும் கச்சிதமான வடிவமைப்பிற்காக டிரைபர் மக்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. ஏழு பேர் அமரக்கூடிய வசதியுடன், இது மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது. இந்த காரில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனையில் 4 நட்சத்திரங்களைப் பெற்றுள்ள ரெனால்ட் டிரைபர் காரில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டாப் வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. மூன்றாவது வரிசை இருக்கைகளை எளிதாக அகற்ற முடியும் என்பதால், இது குடும்பப் பயணங்களுக்கு மிகவும் ஏற்ற காராகும்.

mpv cars under 10 lakh rupees

மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco): மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஏழு இருக்கைகள் கொண்ட வாகனங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆடம்பர அம்சங்களை விட, பயன்பாட்டிற்கும், மலிவு விலைக்கும் முன்னுரிமை அளிக்கிறது. ஈக்கோவில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிக எண்ணிக்கையிலான மக்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இந்த மாருதி சுஸுகி வாகனம் பொருத்தமானதாக உள்ளது. இதனாலேயே, ஈக்கோவை கார் என சொல்வதை காட்டிலும் வேன் (Van) மாடல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், ஈக்கோவில் மிகவும் அடிப்படையான & தேவையான பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. குறைவான பட்ஜெட் உள்ளவர்களுக்கும், வர்த்தகப் பயன்பாட்டிற்கும் ஈக்கோ சிறந்த தேர்வாகும்.

mpv cars under 10 lakh rupees

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga): மாருதி சுஸுகி ஈக்கோவை விட அதிக சவுகரியமும், சிறந்த அம்சங்களும் கொண்ட எம்பிவி காராக எர்டிகா விளங்குகிறது. இதன் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் எல்.எக்ஸ்.ஐ (ஆப்ஷ்னல்) (Lxi (O)) வேரியண்ட் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில், குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் எர்டிகா வெறும் 1 நட்சத்திரத்தை மட்டுமே பெற்றுள்ளது. இது ரெனால்ட் டிரைபர் காரை விடக் குறைவு ஆகும். இருப்பினும், எர்டிகா கார் சவுகரியமான பயண அனுபவத்தை வழங்குவதில் பெயர் பெற்றதாக உள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட்களில் சிஎன்ஜி (CNG) ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

mpv cars under 10 lakh rupees

மஹிந்திரா பொலேரோ நியோ (Mahindra Bolero Neo): இது ஒரு கச்சிதமான எஸ்யூவி (SUV) ரக காராக இருந்தாலும், ஏழு இருக்கைகள் கொண்ட வாகனமாக இது எம்பிவி கார் வாங்க விரும்புபவர்களையும் ஈர்க்கிறது. பொலேரோ நியோ காரின் வலிமையான வடிவமைப்பு மற்றும் டீசல் என்ஜின், ரூ.10 லட்சத்திற்குள் வாங்குவதற்கு இந்த மஹிந்திரா காரை ஒரு தனித்துவமான தேர்வாக விளங்க வைக்கிறது.

இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்படுகிறது. உறுதியான லேடர்-ஃப்ரேம் சேஸிஸில் உருவாக்கப்படும் பொலிரோ நியோ, சிறப்பான ஹேண்ட்லிங் (Handling) மற்றும் அதிக இருக்கை வசதிகளைக் கொண்டுள்ளது. மூன்றாவது வரிசை இருக்கைகள் பக்கவாட்டு நோக்கிய ஜம்ப் சீட்களாக அமைந்துள்ளன. அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களுடன் மட்டுமே உருவாக்கப்பட்டாலும், பொலேரோ நியோ ஆனது கடினமான சாலைகளுக்கும் கொண்டு செல்வதற்கு ஏற்றது ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவி கார்கள் மற்றும் எம்பிவி கார்கள் என இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பினும், இவற்றிற்கு இடையே தனித்தனி பண்புகள் உள்ளன. எஸ்யூவி கார்களை காட்டிலும் அதிக உட்புற இடவசதியை எதிர்பார்ப்பவர்கள் மேற்கூறப்பட்ட எம்பிவி கார்களுள் ஒன்றை வாங்கலாம். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைப்பது கூடுதல் சிறப்பாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 11, 2025, 5:00 [IST]
English summary
Mpv cars under 10 lakh rupees in india renault triber maruti suzuki eeco ertiga mahindra bolero neo
மேலும்... #mpv car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X