குடும்பத்துடன் பயணிக்க இவ்வளவு கார் வரப்போகுதா? விலை ரொம்ப கம்மி தான் போல!
வரும் ஆண்டுகளில், இந்தியாவில் பல புதிய 7-சீட்டர் ஹைப்ரிட் எஸ்யூவிகள் அறிமுகமாக உள்ளன. எஸ்யூவி பிரிவின் பிரபலம் அதிகரித்து வரும் நிலையில், இடவசதியுடன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் மாடல்களை அறிமுகப்படுத்த வாகன உற்பத்தியாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த டிரெண்ட் எரிபொருள் திறன் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதையும், அதிக அளவிலான வாடிக்கையாளரை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டொயோட்டா விரைவில் இந்தியாவில் ஃபார்ச்சுனர் MHEV ஐ அறிமுகப்படுத்த உள்ளது. தென்னாப்பிரிக்கா போன்ற மார்கெட்களில் ஏற்கனவே கிடைக்கும் இந்த மாடல், 48V மைல்டு-ஹைப்ரிட் செட்டப்பை கொண்டுள்ளது. இது ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக்கை கொண்டுள்ள, தற்போதுள்ள 2.8L GD டீசல் இன்ஜினுடன் இணைக்கிறது. இந்த சேர்க்கை மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன், குறைந்த மாசு உமிழ்வு மற்றும் சிறந்த பிக்கப்பை இந்த கார் உறுதியளிக்கிறது.

டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் காரில் எலெக்ட்ரிக் வெர்ஷனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. அப்படியாக வந்தாலும் அது விலை சற்று அதிகமாகவே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பணக்காரர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக சிறப்பாக எதிர்பார்க்கப்படும் காராக இருக்கிறது.
நிஸான் இந்த நிதியாண்டில் தனது புதிய சிறிய B- பிரிவு MPVக்குப் பிறகு ஒரு மிட்-சைஸ் எஸ்யூவியை வெளியிட திட்டமிட்டுள்ளது. 7 சீட்டர் எடிசனும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட்டின் வரவிருக்கும் டஸ்டர் மற்றும் அதன் நிஸான் இணையானது ஹைப்ரிட் பவர்-ட்ரைனைப் பயன்படுத்தினால், அவற்றின் மூன்று வரிசை சீட் கொண்ட எடிசன்களும் அதை பின்பற்றலாம். இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவில் அவற்றின் மார்கெட் இருப்பை வலுப்படுத்தும்.
நிஸான் மற்றும் ரெனால்ட் தரப்பில் ஒரே பிளாட்ஃபார்மில் தயார் செய்யப்படும் வாகனங்கள் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த வாகனங்கள் நிச்சயம் மக்களை மனத்தை மயக்கும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்பு இருக்கிறது. இதனால் இந்த வாகனங்களின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார். இந்த கார் விற்பனைக்கு வரும் போது விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸூகி இந்தியாவிற்காக ஒரு புதிய ஐந்து சீட்டர் எஸ்யூவில் பணியாற்றி வருகிறது என்று கூறப்படுகிறது. அதே சமயம், 7 சீட்டர் கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் பின்னர் அறிமுகமாகலாம். அவை அறிமுகமானால், தற்போதுள்ள 1.5L மைல்டு-ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5L ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். சரியான கால அட்டவணை குறித்த தகவல் வெளியாகவுவில்லை. ஆனால் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
மாருதி நிறுவனம் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களை விற்பனை செய்யும் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவில் மிகப்பெரிய வாட்டிகையாளர் பேஸை இந்த நிறுவனம் தான் வைத்திருக்கிறது. தற்போது இந்த நிறுவனம் குடும்பத்துடன் பயணிக்கும் 7 சீட்டர் காரை புதிதாக அறிமுகப்படுத்தினாலும் அதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

2027 ஆம் ஆண்டிற்குள் ஹூண்டாய் ஆல்கஸார் மற்றும் டூஸான் மாடல்களுக்கு இடையில் ஒரு பிரீமியம் 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு அடுத்த தலைமுறை வென்யூ உற்பத்திக்காக தயாராகி வரும் நிலையில், தலேகான் ஆலையில் உற்பத்தி தொடங்கும் வாய்ப்புள்ளது. இந்த மாடல் ஹூண்டாயின் பிரபலமான 1.5L NA பெட்ரோல் இன்ஜினுடன் ஹைப்ரிட் செட்டப்பை கொண்டிருக்கலாம்.
ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கம் புதிய 7 சீட்டர் கார் ஹூண்டாய் பிராண்டிலும், அதே இன்ஜின் மற்றும் வடிவமைப்புடன் கியா பிராண்டிலும் அதே 7 சீட்டர் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்த கார் நிச்சயம் சிறப்பான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.
வரவிருக்கும் ஹூண்டாய் எஸ்யூவி, எதிர்கால கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மாடல்களில் எதிர்பார்க்கப்படும்தைப் போன்ற ஒரு வலுவான ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினையும் ஒருங்கிணைக்கலாம். இத்தகைய முன்னேற்றங்கள் சுற்றுச்சூழல் நட்புத்தன்மையைப் பேணுவதோடு செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டவை.

ஹைப்ரிட் எஸ்யூவிகளின் இந்த சாத்தியமான அறிமுகங்களுடன் இந்திய மோட்டார் வாகன மார்கெட் உற்சாகமான வளர்ச்சிக்காக தயாராக உள்ளது. உற்பத்தியாளர்கள் புதுமையான தீர்வுகளை ஆராய்ந்து வரும் நிலையில், வாடிக்கையாளர் திறனையும் பல்துறைத் திறனையும் வழங்கும் வாகனங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களை கொரோனா காலத்திற்கு பிறகு மக்கள் விரும்பி வாங்க துவங்கிவிட்டனர். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல குடும்பத்துடன் பயணிக்கும் ரக வாகனங்களை அதிகம் தயாரிக்க துவங்கிவிட்டனர். இதனால் இந்த கார் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார்களில் மக்கள் ரசிக்கும் படி இருப்பதற்க முக்கியமான காரணம் அதிக நபர்கள் பயணிப்பது தான் மக்கள் தற்போது குடும்பத்துடன் பயணிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். அதே நேரம் அதிகமான லக்கேஜ்களை ஏற்றிச்செல்ல முடியும். குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு லக்கேஜ் ஏற்றி செல்ல வசதியாக இருக்கும்.
இது மட்டுமல்ல எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்கள் பார்க்க போல்டாகவும், பிரம்மாண்ட லுக் உடனும் இருப்பதால் மக்கள் இந்த காரை அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் தற்போது மார்கெட்டில் விற்பனையில் இருக்கும் கார்கள் எல்லாம் சிறப்பாக விற்பனயைாகிறது. பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எதிர்காலத்தில் பல 7 சீட்டர் வாகனங்களை களம் இறக்க தயாராக வருகின்றன. இந்த பட்டியலிலேயே 7 கார்கள் இருக்கிறது. இந்த கார்கள் எல்லாம் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்களை எல்லாம் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் எல்லாம் மக்கள் மனதை நிச்சயம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டிலயில் உங்களுக்க பிடித்த கார் எது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் மீதான மோகம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல விதமான எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் பல வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கார்கள் வரிசையாக விற்பனைக்கு வருகிறது. இதில் உங்களுக்கு பிடித்த கார் எது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









