மாசம் முடியற நாள்ல புது காரை விற்பனைக்கு கொண்டாந்திருக்காங்க.. சம்பளம் வந்த உடனே ஓடி வருவாங்க என்கிற நினைப்போ!
பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளான இன்று பிரபல கார் உற்பத்தி நிறுவனம் புதுமுக கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனமே மாதத்தின் கடைசி நாளில் புதுமுக காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் அந்த நிறுவனம் ஆகும். இது புதிய 3 சீரிஸ் லாங் வீல்பேஸ் மாடலையே இந்தியாவில் அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் உள்ளூரில் வைத்து தயாரிக்கப்பட்ட சொகுசு கார் மாடல் ஆகும். சென்னையில் வைத்தே இந்த கார் மாடலை அவர்கள் தயாரித்து இருக்கின்றனர்.
மாத கடைசி நாள் என்றுகூட பார்க்காமல் அவர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதி இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். மறு நாள் மாதம் முதல் நாள் என்பதால் பலருக்கு சம்பளம் வரும், அவர்கள் இந்த காரை வாங்குவார்கள் என்கிற நம்பிக்கையில் இப்படி செய்திருப்பார்களோ என்றே நிறுவனத்தின் இந்த செயல் நம்மை நினைக்கச் செய்திருக்கின்றது.

ஆனால், 62 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினால் மட்டுமே நெட் கேஷில் இந்த காரை வாங்க முடியும். ஏனெனில், இதுவே புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் லாங் வீல்பேஸ் மாடலின் விலை ஆகும். அதேவேளையில், இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆகையால், ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் சற்றே அதிகமாக இருக்கும். இந்தியாவில் இது ஒரே ஒரு தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். பிஎம்டபிள்யூ 330எல்ஐ எம் ஸ்போர்ட் (BMW 330Li M Sport), இதுவே அந்த தேர்வாகும். இதன் டீசல் தேர்வு விரைவிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அதி நவீன லக்சூரி அம்சங்களைத் தாங்கிய ஆடம்பர காராகவே இதனை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட், பெரிய வளைவான திரை, பெரிய பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் இருக்கைகள் மற்றும் மூன்று ஜோன்கள் கொண்ட கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 258 எச்பி மற்றும் 400 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
இதுமட்டுமல்ல இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 6.2 செகண்டுகளே போதுமானது. இதில் சிறந்த ரைடிங் அனுபவத்தைப் பெறும் விதமாக பேடில் ஷிஃப்டர் கொண்ட ஸ்டியரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆகையால், புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் மாடலை ஓட்டும்போது ஸ்போர்ட்ஸ் காரை இயக்கி ஃபீல் கிடைக்கும் என தெரிகின்றது. கூடுதல் சுவாரஷ்ய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும் விதமாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் சொந்த படைப்பான ஐடிரைவ் உடன் கூடிய ஆபரேட்டிங் சிஸ்டம் 8.5-வையும் வழங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக அட்வான்ஸ்டு டிரைவிங் அனுபவத்தை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும்.
உதாரணமாக செல்போன் இணைப்பு, வழக்கமான ரிமோட் வசதி உள்ளிட்டவற்றையே இது கூடுதல் அட்வான்ஸ்டானதாக மாற்றும் வகையில் செயல்படும். இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு வசதி்க கொண்ட எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்டு, கிராஷ் சென்சார் போன்ற அம்சங்களையே பிஎம்டபிள்யூ இந்த காரில் வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிஎம்டபிள்யூவின் தயாரிப்புகள் சிலவற்றிற்கு சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரணத்திற்காகவே பிஎம்டபிள்யூ நிறுவனம் சென்னையில் வைத்து தயாரித்து புதிய 3 சீரிஸ் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு மிக அமோகமான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.


Click it and Unblock the Notifications








