7 சீட்டர், எக்கசக்க மைலேஜ்ன்னு 2026ல் முதல் மாசமே இவ்வளவு கார்கள் வருதா?

2025ம் ஆண்டு நிறைவடைந்து இன்னும் 10 நாளில் 2026ம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்நிலையில் 2026ம் ஆண்டு பிறந்த முதல் மாதத்திலேயே 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது. வழக்கமாக புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் பல கார்கள் அறிமுகமாகும். இப்படியாக வரும் ஜனவரி மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

புதிய தலைமுறை கியா செல்டோஸ்

கியா நிறுவனம் தனது புதிய செல்டோஸ் காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது இரண்டாம் தலை முறை மாடல் ஆகும். இ்நத கார் புதிய கே3 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இதில் புதிய டிசைன் மொழியை காருக்கு உள் பகுதியிலும் வெளிப்பகுதியிலும் கையாண்டுள்ளனர். அளவுகளை பொருத்தவரை தற்போது உள்ள மாடலில் இருந்து 95 மிமீ நீளமாகவும், 30 மிமீ அகலமாகவும், 80 மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உடவும் வருகிறது.

New Car Launches January 2026

இந்த காருக்கான புக்கிங் துவங்கிவிட்டது. ரூ25,000 முன் பணம் செலுத்தி இந்த காரை புக் செய்யலாம். இந்த காரில் 1.5லி நேச்சுரலிஅஸ்பயர்டு பெட்ரோல், 1.5 லி டர்போ டீசல், மற்றும் 1.5 லி டிஜிடிஐ பெட்ரோல்இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் ஜனவரி 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகமாகி பெங்கலை ஓட்டி டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

மாருதி இ-விட்டாரா

மாருதி நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அந்த காரை அந்நிறுவனம் வெளியிட்டுவிட்டது. இதன் விலை எல்லாம் வரும் ஜனவரி மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டெல்டா, ஸெட்டா, மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகியுள்ளது.

New Car Launches January 2026

இந்த கார் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் 49kWh மற்றும் 61 kWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளது. இது 543 கி.மை வரை ரேஞ்ச் தருகிறது. இந்த காரில் முன்பக்க வீல் டிரைவ் ஆப்ஷன் உள்ளது. இது 172 பிஎச்பி பவரையும், 193 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

ரெனால்ட் டஸ்டர்

ரெனால்ட் நிறுவனம் தனது டஸ்டர் காரை இந்திய மார்கெட்டிற்கு கொண்டு வருகிறது. இந்த கார் வரும் ஜனவரி 26ம் தேதி காட்சிப்படுத்தபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த கார் சிஎம்எஃப்-பி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 1.3 லி டர்போ பெட்ரோல் இன்ஜின் 154 பிஎச்பி பவர் மற்றம் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

New Car Launches January 2026

இந்நிறுவனம் இதில் ஹைபிரிட் இன்ஜினை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சர்வதேச மாடலை போல தான் இந்தியாவிற்கும் வரும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட்

ஸ்கோடாட நிறுவனம் தனது குஷாக் காருக்கு வரும் ஜனவரி மாதம் மிட்லைஃப் அப்டேட்டை வழங்குகிறது. இதில் முன்பக்க பகுதி மாற்றியமைக்கப்படுகிறது. புதிய அலாய் வீல்கள், பின்பக்க மறுவடிவமைப்பு,கேபின் உள்ளே சிறிய மாற்றங்கள், பானரோமிக் சன் ரூஃப், 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும். இதில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது. அதே 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5லி டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 காருக்கு மிட் லைஃப் அப்டேட்டை வழங்கவுள்ளது.இந்த கார் வரும் ஜனவரி 5ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் வெளிப்புற வடிவமைப்பு, உட்புறத்தில் சில மாற்றங்கள், செய்யவுள்ளத. இதில் முக்கியமாக சமீபத்தில் அறிமுகமான எக்ஸ்இவி 9எஸ் காரின் வடிவமைப்பை ஒத்து இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தகாரில் 3 ஸ்கிரீன் டேஷ்போர்டு லே அவுட், முன்பக்க சீட் மசாஜ் அம்சம், பின்பக்கமும் வென்டிலேட்டட் சீட்டுகள், 6 சீட்டர், 196 ஸ்பீக்கர் கொண்ட பிரிமியம் சவுண்ட் சிஸஅடம், மல்டி கலர் ஆம்பியன்ஸ் லைட்டிங், 2.0 லிட்டர் எம் ஸ்டாலின் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என பெயர் மாற்றமும் பெறுகிறது.

நிஸான் கிராவேட் எம்பிவி

நிஸான் நிறுவனம் காம்பேக்ட் எம்பிவி காராக புதிய கிராவேட் என்ற காரை அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் 7 சீட்டர் எம்பிவி கார் ஆகும். இ்நத கார் வரும் ஜனவரியில் காட்சிப்படுத்தப்பட்டு வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகுமாகும் என எதரி்பார்க்கலாம். இந்த கார் சிஎம்எஃப் ஏ+ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. இதில் வெளிப்புவடிவமைப்பு உட்புற வடிவமைப்பு எல்லாம் டிரைபர் காரின் லுக்கிலேயே இருக்கிறது.

இந்த காரில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் 76 எச்பி பவர் 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மேக்னைட், கைகர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்

டாடா மோட்டார்ஸ் நிறவனம் தனது பஞ்ச் காரில் மிட் லைஃப் அப்டேட்டை பெறப்போகிறது. இந்த கார் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த காரை பல இடங்களில் சோதனை செய்வதை காண முடிகிறது. இந்த காரின் கேபின் பகுதியில் புதிய ஸ்டியரிங் வீல், டேஷ்போர்டு லேஅவுட், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்கள் உள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் சிஎன்ஜி ஆப்ஷன் உடன் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் 7 காரகள் அறிமுகமாகிறது. இது நிச்சயம் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார்கள் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 21, 2025, 14:35 [IST]
English summary
New car launches january 2026 kia mahindra
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X