பண்டிகையில் புது கார் வாங்கும் செண்டிமெண்ட் இருக்கும் வரை இது மாறாது! எப்போ எப்போனு காத்துனு இருந்தாங்க போல!

வருடத்தின் இறுதி மாதங்கள் வந்துவிட்டாலே இந்தியாவில் பண்டிகைகளும் தொடர்ச்சியாக வந்துக் கொண்டே இருக்கும். ஏனெனில், மக்கள் பண்டிகை சமயத்தின் போதுதான் புதியதாக கார்களை வாங்குவார்கள் என்பதால், அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முக்கியமான தீபாவளி (Diwali), தசரா (Dussehra) உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சில மாதங்களுக்கு முன்னரே புதிய கார்களை அறிமுகப்படுத்த கார் நிறுவனங்கள் துவங்கிவிடுவதை ஒவ்வொரு வருடமும் பார்க்க முடிகிறது.

முற்றிலும் புதிய காரை அறிமுகம் செய்ய முடியாவிடினும், குறைந்தப்பட்சம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் காரின் புதிய ஸ்பெஷல் எடிசன்களை (Special Editions) ஆவது கார் கம்பெனிகள் அறிமுகம் செய்ய முயற்சிக்கும். அந்த வகையில், நடந்து முடிந்த இந்தியாவின் 79வது சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும், இனி வர போகும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் கடந்த 3 வாரங்களில் மட்டும் எத்தனை கார்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

new car launches that happened last 3 weeks

மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் (Mahindra BE 6 Batman Edition): சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்ற ஸ்பெஷல் எடிசன் கார், பிஇ 6 பேட்மேன் எடிசன் என்கிற எலக்டரிக் கார் (Electric Car) ஆகும். சுதந்திர தினத்தன்று 'ஃப்ரீடம்_நியு' (Freedom_NU) என்கிற பெயரில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திய மஹிந்திரா நிறுவனம், இந்த நிகழ்ச்சிக்கு முந்தைய தினமே பிஇ 6 பேட்மேன் எடிசனை அறிமுகம் செய்துவிட்டது.

new car launches that happened last 3 weeks

நிசான் மேக்னைட் குரோ எடிசன் (Nissan Magnite Kuro Edition): இந்தியாவில் நிசானில் இருந்து விற்பனை செய்யப்படும் இரண்டே இரண்டு கார்களில் ஒன்றான மேக்னைட்டின் விற்பனையை இந்த பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் முயற்சியாக, மேக்னைட்டில் புதியதாக குரோ எடிசன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ள புதிய மேக்னைட் குரோ எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.8.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

new car launches that happened last 3 weeks

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி.எல்.இ53 கூபே (Mercedes-AMG CLE 53 Coupe): பணக்காரர்களை இந்த பண்டிகை காலத்தில் கவரும் முயற்சியாக ஆகஸ்ட் 12ஆம் தேதியில் இந்த பென்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பென்ஸ் கார் என சொல்வதை காட்டிலும், இது பென்ஸ் காரை காட்டிலும் செயல்திறன்மிக்க மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார் ஆகும். ரூ.1.35 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த கூபே ரக கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

new car launches that happened last 3 weeks

டாடா ஹெரியர் & சஃபாரி அட்வென்ச்சர் எக்ஸ் (Tata Harrier & Safari Adventure X): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களான ஹெரியர் மற்றும் சஃபாரியில் புதியதாக 'அட்வென்ச்சர் எக்ஸ்' என்கிற பெயரில் ஸ்பெஷல் எடிசன்கள் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன.

new car launches that happened last 3 weeks

வால்வோ எக்ஸ்.சி60 ஃபேஸ்லிஃப்ட் (Volvo XC60 Facelift): இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் விற்பனையில் இருந்த எக்ஸ்சி60 என்கிற எஸ்யூவி (SUV) ரக காருக்கு மாற்றாக அதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சனை கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இந்தியாவில் வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்தது. முந்தைய எக்ஸ்சி60 காரை காட்டிலும் ரூ.1.15 லட்சம் விலை அதிகமாக ரூ.70.75 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

new car launches that happened last 3 weeks

எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster): எம்ஜி மோட்டார் நிறுவனம் இதுவரையில் உருவாக்கிய அதிவேகமான காரான சைபர்ஸ்டர் இந்தியாவில் கடந்த ஜூலை மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஜி நிறுவனத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car), சைபர்ஸ்டர் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்றில் இருந்து கடந்த 3 வாரங்களில் அறிமுகம் செய்யப்பட்ட கார்கள் மட்டும் இத்தனை உள்ளன. இன்னும் கூடுதலாக 1 வாரத்தை சேர்த்தால், இன்னும் சில கார் அறிமுகங்கள் உள்ளன. அதேபோல், இந்த ஆகஸ்ட் மாதம் முடிவதற்கு உள்ளாக இன்னும் சில கார்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வருவதற்கு தயாராகி வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 20, 2025, 23:59 [IST]
English summary
New car launches that happened in the last 3 weeks mg cyberster to mahindra batman edition
மேலும்... #new car launch #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X