விசித்திரமான தோற்றத்தில் சென்னை சாலைகளில் சுற்றி திரிந்த கார்! 9 லட்ச ரூபாயில் அறிமுகம் செய்யும் முன் சோதனை!

சிட்ரோன் (Citroen) நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் நுழைந்த சிட்ரோன், கடந்த 3 வருடங்களில் இந்தியாவில் பல்வேறு விதமான கார்களை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் எதிர்பார்த்த வெற்றியை சிட்ரோன் பெற்றுள்ளதா என கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரபல கிரிக்கெட் (Cricket) வீரர் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) அவர்களை பிராண்ட் தூதராக நியமித்தும் இந்தியர்கள் மத்தியில் பெரியதாக சிட்ரோன் நிறுவனத்தால் கவனத்தை பெற முடியவில்லை. இந்திய மார்க்கெட்டில் களம்புகுந்து 3 வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளது என்றாலும், சிட்ரோன் நிறுவனம் தனது இந்தியா 2.0 திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது.

citroen aircross car spy images

அதாவது, இந்திய சந்தைக்கென கூடுதலாக கவனம் செலுத்தி, அதற்கேற்ப கார்களை அறிமுகம் செய்வது என்பது சிட்ரோனின் அடுத்தக்கட்ட திட்டமாக உள்ளது. அதன்படி, ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஏர்கிராஸ் (Aircross) காரை அப்கிரேட் (Upgrade) செய்ய சிட்ரோன் தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய சிட்ரோன் ஏர்கிராஸ் கார் ஒன்று சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படங்களை டீம் பிஎச்பி (Team-BHP) செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

சென்னையின் பரபரப்பான சாலையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள இந்த சோதனை ஓட்டத்தில் புதிய சிட்ரோன் ஏர்கிராஸ் கார் எந்தவொரு மறைப்பும் இன்றி காட்சியளிக்கிறது. எந்த நிறுவனத்தின் கார் என்பது தெரியக் கூடாது என்பதற்காக, காரின் முன்பக்கத்தில் லோகோ மறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், காரின் உள்ளே பின்பக்க இருக்கை வரிசையை பார்க்க முடியாத அளவிற்கு பின்பக்க ஜன்னல் கண்ணாடிகள் மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளன.

citroen aircross car spy images

மேலும், காரின் உள்ளே டேஸ்போர்டு (Dashboard), செண்டர் கன்சோல் (Centre Consol) பகுதி மற்றும் கதவுகளின் உட்பக்கங்கள் மறைப்புகளால் மறைக்கப்பட்டு இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் இருந்து, புதிய சிட்ரோன் ஏர்கிராஸ் காரில் இந்த பகுதிகளில் அப்டேட்களை எதிர்பார்க்கலாம் என்பதை அறிய முடிகிறது.

அதேநேரம், புதிய ஏர்கிராஸ் காரின் வெளிப்பக்கத்தில் அதிகமாக எந்த அப்டேட்களையும் எதிர்பார்க்க முடியாது என்பதும் தற்போது சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் அறிய முடிகிறது. புதிய ஏர்கிராஸ் காரின் வெளிப்பக்கத்தில் புரோஜெக்டர் ஹெட்லைட்கள், கருப்பு நிறத்திலான ORVM-கள் மற்றும் கருப்பு நிற மேற்கூரை ரெயில்கள் உள்ளிட்டவை இப்போது இருப்பதுபோல் அப்படியே தொடரப்படும் என எதிர்பார்க்கிறோம்.

citroen aircross car spy images

அதேநேரம், உள்ளே மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திற்கு பதிலாக பிரவுன் நிறத்திலான கேபின் உடன் புதிய ஏர்கிராஸ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனுடன், வெண்டிலேட்டட் (Ventilated) முன் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 10.25-இன்ச்சில் பெரிய அளவிலான டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்றப்படி, சிட்ரோன் ஏர்கிராஸ் காரின் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் செய்யப்பட போவதில்லை. இது மட்டுமின்றி, ஏர்கிராஸ் காரின் உட்பக்க கேபினை தவிர்த்து காரின் வெளிப்பக்கத்திலும் சிட்ரோன் நிறுவனம் பெரியதாக எந்தவொரு அப்டேட்டையும் கொண்டுவர போவதில்லை. இந்தியாவில் 2வது இன்னிங்ஸை துவங்க போவதாக அறிவித்த பின் சிட்ரோனில் இருந்து இவ்வளவு குறைவான சிறு, சிறு அப்டேட்கள் உடன் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 10, 2025, 9:00 [IST]
English summary
New citroen aircross spotted in chennai ahead of launch check all details here
மேலும்... #citroen #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X