இந்த விஷயம் மட்டும் வெளிய வந்துச்சுனா மாருதி, டாடாலாம் காலி! மொத்த மார்க்கெட்டையும் மிரள விட்ட புதிய கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் தற்போதெல்லாம் கார்களின் பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) அதிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். பாரத் என்சிஏபி (Bharat NCAP) மற்றும் குளோபல் என்சிஏபி (Global NCAP) போன்ற அமைப்புகளின் மோதல் சோதனைகளில், ஒரு கார் எவ்வளவு பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கியுள்ளது? என்பதை பொறுத்துதான், அந்த காரை வாங்கலாமா? அல்லது வேண்டாமா? என்ற முடிவையே ஒரு சில வாடிக்கையாளர்கள் எடுக்கின்றனர்.

எனவே முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டு கொண்டு, கார்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகரித்து வருகின்றன. இதை செய்யும் நிறுவனங்களின் கார்கள், மோதல் சோதனைகளில் சிறப்பான ரேட்டிங்கை பெறுகின்றன. குறிப்பாக டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்களின் கார்கள், சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று கொண்டுள்ளன.

New Gen Hyundai Venue Side View

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்களும், தற்போது மோதல் சோதனைகளில் சிறப்பான ரேட்டிங்கை பெற தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும், தங்களது கார்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ (New Gen Hyundai Venue) காருக்கு, குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்க கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை வெறும் 7.90 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகை விலை என்பதுடன், எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

New Gen Hyundai Venue Interior

இந்த காருக்கு, பாரத் என்சிஏபி அமைப்பு, தற்போது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வழங்கியுள்ளதாக கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் ஹூண்டாய் நிறுவனமோ அல்லது பாரத் என்சிஏபி அமைப்போ, இந்த தகவலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் கூடிய விரைவில், அதிகாரப்பூர்வமான தகவலை நாம் எதிர்பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு அஸிஸட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் மிகவும் வலிமையாக்கப்பட்ட கே1 பிளாட்பார்ம் அடிப்படையில், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாரத் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய கியா சைரோஸ் (Kia Syros) காரும், இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் நிறுவனம்தான், கியா நிறுவனத்தின் தாய் நிறுவனம். எனவே இந்த 2 நிறுவனங்களின் கார்களும் ஒரே பிளாட்பார்ம்மில் கட்டமைக்கப்படுகின்றன என்பதை இங்கே நினைவுப்படுத்தி கொள்கிறோம். ஹூண்டாய் வெனியூ காரின் போட்டி மாடல்களான டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய 2 கார்களும், குளோபல் என்சிஏபி, பாரத் என்சிஏபி என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

எனவே ஹூண்டாய் நிறுவனமும், வெனியூ காருக்கு,5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெறுவது அவசியமான ஒன்றாக இருந்தது. அதை ஹூண்டாய் நிறுவனம் தற்போது சாத்தியமாக்கி விட்டதாக வெளிவரும் தகவல்கள், மகிழ்ச்சி அளிக்க கூடியவையாக உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை நாம் காத்திருப்பது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, இந்த பாரத் என்சிஏபி அமைப்பின் 5 ஸ்டார் ரேட்டிங் உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் ஹூண்டாய் வெனியூ காரின் மற்ற போட்டி மாடல்களான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) போன்ற கார்களுக்கு இதனால் நெருக்கடி ஏற்படலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 6, 2025, 16:35 [IST]
English summary
New gen hyundai venue achieves 5 star bharat ncap safety rating check all details here
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+