மாருதி, டாடாவை முடித்து கட்ட வரும் ஹூண்டாய் கார்! வர்ற 4ம் தேதி மொத்த இந்தியாவையும் மிரள விட போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் (நவம்பர் 4 லான்ச் ஆகிறது), புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார், தற்போது அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும், அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

New Gen Hyundai Venue Interior

புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை கப்பா 1.2 லிட்டர் MPi பெட்ரோல், கப்பா 1.0 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் ஆகியவை ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களின் (Gear Box Options) எண்ணிக்கையும் கூட மூன்றுதான்.

அவை மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆகிய கியர் பாக்ஸ்கள் ஆகும். புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், தலா 12.3 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள ட்யூயல் பனரோமிக் டிஸ்ப்ளேக்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றன.

New Gen Hyundai Venue

இதில் ஒரு டிஸ்ப்ளே, டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமாக செயல்படும். மற்றொரு டிஸ்ப்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். இதுதவிர ரியர் ஏசி வெண்ட்கள், பிரீமியம் லெதர் ஆர்ம்ரெஸ்ட், ரியர் விண்டோ சன்ஷேடு மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பின் இருக்கைகளை சாய்த்து கொள்ளும் வசதி போன்ற அம்சங்களும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் வெனியூ உடன் ஒப்பிடும்போது, புதிய தலைமுறை மாடல் சற்று பெரியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடல் உடன் ஒப்பிடும்போது, புதிய தலைமுறை மாடலின் உயரம் 48 மிமீ அதிகம். அதே நேரத்தில் புதிய தலைமுறை மாடல் 30 மிமீ அகலமானதாகவும் உள்ளது. எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடல் உடன் ஒப்பிடும்போது, கேபின் சற்று விசாலமானதாக இருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் மீது விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், தற்போதே அதை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு தொகை 25 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ, புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரை முன்பதிவு செய்ய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.46 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ள காரணத்தால், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் விலை சற்று உயர்த்தப்படலாம். இந்த புதிய மாடலின் வருகை, (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, October 24, 2025, 14:41 [IST]
English summary
New gen hyundai venue breaks cover in india official bookings open
மேலும்... #hyundai #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+