மாருதி, டாடாவை நடுங்க வைத்த ஹூண்டாயின் புதிய கார்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷம் ஷோரூம்லதான் இருப்பீங்க
புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ (New Gen Hyundai Venue) கார், நேற்று (நவம்பர் 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் புதிய தலைமுறை வெனியூ காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கான (Variants) விலைகளை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
ஆனால் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் அனைத்து வேரியண்ட்களுக்கான விலைகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின்படி பார்த்தால், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்களின் விலை 7.90-10.70 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்களின் விலை 8.80-14.56 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்களின் விலை 9.70-15.51 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் என் லைன் (N Line) மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.55 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.48 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

முன்பு விற்பனையில் இருந்த மாடலை காட்டிலும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார் அளவில் சற்று பெரியது ஆகும். அதாவது புதிய தலைமுறை மாடலின் வீல்பேஸ் நீளம் 20 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அகலம் 30 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. உயரம் 48 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் கேபின் பயணிகளுக்கு விசாலமான இடவசதியை உறுதிப்படுத்தும்.
புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் முன் பகுதியில் உள்ள டேஷ்போர்டில் தலா 12.3 இன்ச் அளவில் 2 திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும். அதே நேரத்தில் மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக இயங்கும்.
இதுதவிர லெவல் 2 அடாஸ், முன் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளையும் (Features) புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கொண்டுள்ளது.
ரியர் விண்டோ சன்ஷேடுகள், சாய்த்து கொள்ள கூடிய வகையிலான பின் பக்க இருக்கைகள், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 8 ஸ்பீக்கர் பாஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) ஆகிய கார்களுக்கு எல்லாம் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








