மாருதி, டாடாவை கதற விட போகும் ஹூண்டாயின் புதிய கார்... தேதியை இப்பவே காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் வெனியூ காரின் புதிய தலைமுறை மாடல், இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார் வரும் அக்டோபர் 24ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக காடிவாடி தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hyundai Venue Side View

தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஒரு சில டிசைன் அம்சங்களை, புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்கள் ஆகியவற்றையும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் நாம் எதிர்பார்க்க முடியும்.

அதேபோல் லெவல் 2 அடாஸ் தொகுப்பு, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hyundai Creta

அதாவது புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் டிசைனில் நிறைய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அத்துடன் பல்வேறு புதிய வசதிகளும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் கூடுதலாக வழங்கப்படவுள்ளன. ஆனால் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், புதிய தலைமுறை மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பார்த்தால், 1.0 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படும்.

அத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுகின்ற காரணத்தால், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.94 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 13.62 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் புதிய தலைமுறை மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் வருகை, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2025, 23:43 [IST]
English summary
New gen hyundai venue india launch date october 24 check all details here
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+