மாருதி கதையை முடித்து கட்ட வரும் புதிய கார்... டாடா, மஹிந்திராவிற்கும் ஆப்பு வைக்க போகுது...

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருப்பது மாருதி சுஸுகி (Maruti Suzuki). இந்த பட்டியலில் முன்பு ஹூண்டாய் (Hyundai) சௌகரியமாக இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போதைய சூழல் முன்பு போல் இல்லை. ஹூண்டாய் நிறுவனத்தின் 2வது இடத்திற்கு, டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களும் போட்டிக்கு வந்து விட்டன. மாருதி சுஸுகியை வீழ்த்தி முதல் இடத்தை பிடிப்பது என்பது தற்போதைக்கு நடக்காத விஷயம். ஆனால் 2வது இடத்திற்கு ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் சரிக்கு சமமாக போட்டி போடுகின்றன.

டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் மிக கடுமையான போட்டி காரணமாக, ஹூண்டாய் நிறுவனம் சுதாரிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது விற்பனையில் உள்ள தனது கார்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்களை களமிறக்கும் பணிகளில் ஹூண்டாய் நிறுவனம் தீவிரமாக உள்ளது.

Hyundai Venue Side View

இதில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ (New-gen Hyundai Venue) ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 ஆயிரம் ஹூண்டாய் வெனியூ கார்கள் விற்பனையாகி வருகின்றன.

Hyundai Venue

எனவே ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்தும் முக்கியமான கார்களில் ஒன்றாக வெனியூ இருக்கிறது. இந்த சூழலில், வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட வெனியூ காரின் புதிய தலைமுறை மாடலை அறிமுகம் செய்வதன் மூலம், தனது ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும் என ஹூண்டாய் நிறுவனம் விரும்புகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார், இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் வெனியூ காரில், லெவல் 1 அடாஸ் வசதி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் புதிய தலைமுறை மாடலில் லெவல் 2 அடாஸ் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தற்போதைய மாடலில் இருப்பதை காட்டிலும், பல்வேறு புதிய வசதிகளையும் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

அதேபோல் டிசைனை பொறுத்தவரையில், புதிய க்ரில் அமைப்பு, புதிய பம்பர்கள், புதிய அலாய் வீல்கள், புதிய ரூஃப் ரெயில்கள், புதிய ஹெட்லைகள் மற்றும் புதிய டெயில்லைட்கள் என ஏராளமான மாற்றங்களை நாம் எதிர்பார்க்க முடியும். ஆனால் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது.

அதாவது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான், புதிய தலைமுறை மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் தொடர்ந்து வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் வெனியூ காரின் புதிய தலைமுறை மாடலின் வருகை, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதன் போட்டி மாடல்களுக்கு, மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல்வேறு அப்டேட்கள் காரணமாக புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் விலை சற்று அதிகமாக இருக்கலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 7.94-13.62 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) ஹூண்டாய் வெனியூ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உடன் ஒப்பிடும்போது, புதிய தலைமுறை மாடலின் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். இருப்பினும் இது தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே இருக்கும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 20, 2025, 23:13 [IST]
English summary
New gen hyundai venue india launch details maruti suzuki brezza tata nexon rival
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+