மாருதி, டாடா பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய ஹூண்டாய் கார்... தீபாவளிக்கு சரவெடியா வெடிக்க போகுது...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இந்த கார் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம்தான் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த காருக்கு 6 வயதாகி விட்டது. எனவே இந்த காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் தயாராகி வருகிறது.

வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலின் மூலம் வெனியூ காரை சந்தையில் 'ஃப்ரெஷ்' ஆக வைத்திருக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் இந்த புதிய தலைமுறை மாடலின் மூலம் சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் வெனியூ காருக்கான போட்டியையும் ஹூண்டாய் நிறுவனத்தால் சமாளிக்க முடியும்.

Hyundai Venue Side View

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள மாடல் உருவாக்கப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான், ஹூண்டாய் வெனியூ காரின் புதிய தலைமுறை மாடலும் உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஹூண்டாய் நிறுவனத்தால் புதிய தலைமுறை வெனியூ காரின் உற்பத்தி செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

ஆனால் டிசைன் விஷயத்தில், ஹூண்டாய் வெனியூ பல மாற்றங்களை காணவுள்ளது. இதன் முன் பகுதியானது, வரும் 2028ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் 2வது தலைமுறை ஹூண்டாய் பாலிசைடு (Hyundai Palisade) காரை மனதில் வைத்து, உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tata Nexon

அத்துடன் 'C' வடிவ பகல் நேர விளக்குகள் உடன் செங்குத்தான ஹெட்லேம்ப்கள், பெரிய ரேடியேட்டர் க்ரில் அமைப்பு, ரூஃப் ரெயில்கள் மற்றும் புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் ஆகிய அம்சங்களையும் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

வசதிகளை பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும் என கருதப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் MPi பெட்ரோல், 1.0 லிட்டர் TGDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi VGT டீசல் ஆகிய 3 இன்ஜின்கள்தான் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ஆகிய ஆப்ஷன்கள் எல்லாம் வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார், வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet), மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் வருகை, நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை அனேகமாக 8.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். வரும் நாட்களில் இந்த காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகும் என நாம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 27, 2025, 23:26 [IST]
English summary
New gen hyundai venue india launch nears expected price and specifications
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+