மாருதி, டாடாவை கதற விட போகும் ஹூண்டாயின் புதிய கார்! சம்பவத்துக்கு நாள் குறிச்சுட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). கடந்த 2019ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ கார், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub 4m Compact SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.
இந்த காரின் புதிய தலைமுறை (New-gen) மாடலின் அறிமுக தேதி (Launch Date) ஆட்டோகார் இந்தியா தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின் மூலமாக தற்போது நமக்கு தெரிய வந்துள்ளது. இந்த செய்தியின்படி பார்த்தால், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார், வரும் நவம்பர் 4ம் தேதி (November 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற மேம்பட்ட மற்றும் அதிநவீனமான பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர்கள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள் போன்ற வசதிகளும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி பார்த்தால், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதே போல் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் தொடர்ந்து வழங்கப்படலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.26 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.46 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படும் காரணத்தால், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் விலை சற்று உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் புதிய விலை எவ்வளவு? என்பது வரும் நவம்பர் 4ம் தேதிதான் நமக்கு தெரியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் வருகை, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, ரெனால்ட் ட்ரைபர், நிஸான் மேக்னைட் மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








