மாருதி சாம்ராஜ்யத்தை அடியோடு சரிக்க போகும் விலை குறைவான ஹூண்டாய் கார்! சொன்ன மாதிரியே களத்துல எறக்கீட்டாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார் (New-gen Hyundai Venue), இன்று (நவம்பர் 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார், அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில், 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். அதிகபட்சமாக 82 பிஹச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

New Gen Hyundai Venue Side View

இதுதவிர 118 பிஹெச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கொண்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனையும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ பெற்றுள்ளது. அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

New Gen Hyundai Venue Interior

வசதிகளை (features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

அத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ப்ளூலிங்க் கனெக்டிவிட்டி, 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், புதிய 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், டிரைவ் மற்றும் ட்ராக்ஸன் மோடுகள், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் ஓடிஏ அப்டேட்கள் போன்ற வசதிகளையும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் 3 வேரியண்ட்களுக்கான விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், HX 2 வேரியண்ட்டின் விலை 7.90 லட்ச ரூபாய் ஆகவும், HX 4 வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாய் ஆகவும், HX 5 வேரியண்ட்டின் விலை 9.15 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவை அனைத்துமே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல்/5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் ஆகும். எஞ்சிய வேரியண்ட்களுக்கான விலைகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் வருகை மூலமாக, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) ஆகிய கார்களுக்கு, விற்பனையில் நெருக்கடி ஏற்படலாம்.

அத்துடன் கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) ஆகிய கார்களுக்கும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2025, 14:01 [IST]
English summary
New gen hyundai venue launched in india price features engine options and more
மேலும்... #hyundai #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+