நாடே இந்த காருக்குதான் வெயிட்டிங்! தீபாவளி முடிஞ்சதும் இந்த காரை தான் எல்லாரும் வாங்க போறாங்க!
ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரை அப்டேட் செய்து விரைவில் அறிமுகப்படுத்தப்போகிறது. வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி இந்த கார் அறிமுகமாகவுள்ள நிலையில் இதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இது குறித்த விாிவான விபரங்களைகாணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் இந்த 2025ம் ஆண்டிற்கான மிக முக்கியமான அறிமுகமாக தனதுவென்யூ காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி காராக அறிமுகமாகிறது. அப்டேட் செய்யப்பட்ட இந்த காரின் புகைப்படங்கள் "தி கொரியன் கார் பிளாக்" என்ற தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் செய்யப்பட்டுள்ள அப்டேட்கள் தெளிவாக தெரிகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்த புதிய வென்யூ காரின் முன்பக்கத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளது. முக்கியமாக இதன் கிரில் பகுதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் முகப்பு பகதியில் 5 அகலவாக்கிலான பார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 3 லேயர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக சி வடிவ எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. இது போக ஸ்பிலிட் ஹெட்லைட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
இது போக புதிய டர்ன் இண்டிகேட்டர் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் உள்ளது. இது காருக்கு மஸ்குலரான லுக்கை வழங்குகிறது. பின்பக்கமும் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இதில் மற்ற எஸ்யூவி காரில் உள்ள ஸ்டைலிங் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக பின்பக்கம் அகலவாக்கிலோன லைட்பார் மற்றும் பிஸியான பம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டு பகுதியை பொரத்தவரை புதிதாக வடிவமைக்கப்பட்ட டுயல் டோன் அலாய் வீல்கள், ரூஃப் லைன், மற்றும் பில்லர் வடிவமைப்பு மாற்றம் ஆகியவை உள்ளன. தற்போது உள்ள மாடலை விட தீக்கான கருப்பு நிற வீல் ஆர்ச் கிளாடிங் ஆகிய காருக்கு ஒரு போல்டான லுக்கை வழங்குகிறது. இந்த காரில் ரூஃப் ரெயில்கள், புதிய ஸ்பாயிலர்கள், மேல் பகுதியில் வைக்கப்பட்ட ஸ்டாப் லேம்ப், ஷார்க் ஃபின் ஆண்டனா, ஆகிய அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை அதே பழைய இன்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.இதில் எந்த விதமான மாற்றங்களும் இல்லாமல் அப்படியே இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பவர் மற்றும் டார்க் திறனிலும் எந்த மாற்றங்களும் இடம்பெற போவதில்லை.

இந்த காரில் உள்ள கியர் பாக்ஸ் பகுதியிலும் மாற்றங்கள் எதுவும் இல்லை அதே 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளது. இந்தகாரின் உட்பகதியில் டுயல் டோன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டள்ளது. இந்த காரில் உள்ள பெரிய கர்வ்டு டிஸ்பிளே யூனிட் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்கள் உள்ளன. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரில் சிங்கிள் பேன் சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்டுகள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர், பாதுகாப்பிற்காக லெவல் 2 அடாஸ் அம்சங்கள், உள்ளது. இந்த காரின் டேஷ் போர்டு பகுதி வடிவமைப்பில் மாற்றங்கள் உள்ளது. புதிய ஏசி வென்ட்கள், சென்டர் கன்சோல் டிசைன், புதிய ஸ்டியரிங் வீல், மற்றும் கருப்பு நிற சீட் ஆகிய அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய வென்யூ காருக்கு மார்கெட்டில் நல்ல டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் அறிமுகத்திற்கு பிறகு மார்கெட்டி்ல ஹூண்டாய் கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. இந்த கார் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









