ஹூண்டாய் தரமான சம்பவத்துக்கு தயாராகிட்டு இருக்கு! 10 லட்ச ரூபாயில் கார் விலையை நிர்ணயிச்சிட்டா தீயா இருக்கும்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் வென்யூ (Venue) எஸ்யூவி கார் புதிய தலைமுறைக்கு அப்கிரேட் செய்யப்பட உள்ளது. இதன்படி, ஹூண்டாய் வென்யூ காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட உள்ளது. இதனாலேயே புதிய தலைமுறை வென்யூ காரின் அறிமுகம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், புதிய வென்யூ கார் அறிமுகத்திற்கு முன்னதாக சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது.

அதுவும் ஒரேயொரு புதிய வென்யூ கார் மட்டுமில்லை, மொத்தம் மூன்று புதிய வென்யூ கார்கள் ஒரே நேரத்தில் பொதுச் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள் 'ரஷ்லேன்' (Rushlane) செய்தித்தளம் மூலமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ளன. இந்தியாவில் இந்த சோதனை ஓட்டம் எங்கு நடத்தப்பட்டு உள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.

new-gen hyundai venue car spy images

அநேகமாக மஹாராஷ்டிரா மாநிலமாக இருக்கலாம். ஒரே நேரத்தில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள 3 புதிய வென்யூ கார்களும் முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கின்றன. அறிமுகத்திற்கு முன்னதாக காரின் தோற்றம் யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்பதற்காக இவ்வாறு முழுவதுமாக கார் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய தலைமுறை வென்யூ காரை வருகிற அக்டோபர் 24ஆம் தேதியில் ஹூண்டாய் நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இது ஹூண்டாய் வென்யூ காருக்கு வழங்கப்பட உள்ள 2வது ஜென்ரேஷன் அப்டேட் ஆகும். இதற்கு முன்னரும் புதிய தலைமுறை வென்யூ கார் இதேபோன்று சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு உள்ளது.

new-gen hyundai venue car spy images

ஆனால், அந்த சமயங்களில் எல்லாம் காரின் வெளிப்பக்கத்தை மட்டுமே மறைப்புகளுடன் பார்க்க முடிந்திருந்த நிலையில், தற்போது முதல்முறையாக புதிய வென்யூ காரின் உட்பக்கத்தை காண முடிந்துள்ளது. இதன் மூலமாக பார்க்கும்போது, புதிய வென்யூ காருக்கு உள்ளே கேபினில் ட்யூயல்-ஸ்க்ரீன் செட்-அப் வழங்கப்பட உள்ளது. இதன்படி, புதிய வென்யூ காரினுள் டேஸ்போர்டில் 10.2 இன்ச்சில் இரு திரைகள் வழங்கப்பட உள்ளன.

இதில் ஒரு திரை டிரைவருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடியதாகவும், மற்றொரு திரை பயணிகளின் பொழுதுப்போக்கிற்கான இன்ஃபோடெயின்மெண்ட் (Infotainment) திரை ஆகவும் இருக்கும். வென்யூ காரில் இவ்வாறான ட்யூயல்-ஸ்க்ரீன் செட்-அப் வழங்கப்பட உள்ளது இதுவே முதல்முறை ஆகும். இந்த இரட்டை-திரை செட்-அப்பை ஏற்கனவே கிரெட்டா (Creta) மற்றும் அல்கஸார் (Alcazar) கார்களில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கிவரும் நிலையில், அதனை புதிய வென்யூ காருக்கும் தொடர உள்ளது.

new-gen hyundai venue car spy images

இந்த ட்யூயல்-ஸ்க்ரீன் செட்-அப்பின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த இரட்டை திரை செட்-அப் ஆனது ஒரே பேனலில் வழங்கப்பட உள்ளது. அதாவது, காருக்கு வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரேயொரு திரை மட்டுமே நீளமானதாக இருப்பதுபோல் தெரியும். இந்த திரைகளுக்கு கீழே, அழுத்தியும், சுழற்றியும் பயன்படுத்தக்கூடிய கண்ட்ரோல்கள் உள்ளன. அதாவது, தொடுதல் மூலமாக கண்ட்ரோல் செய்யும் வசதியை புதிய வென்யூ காரின் செண்ட்ரல் கன்சோல் பகுதியில் ஹூண்டாய் வழங்க போவதில்லை.

இந்த கண்ட்ரோல்கள் மூலமாகவே, ஆட்டோமேட்டிக் ஏசியை கண்ட்ரோல் செய்யும் வகையில் வழங்கப்படும். இதேபோல், புதிய வென்யூ காரில் ஸ்டேரிங் சக்கரமும் புத்தம் புதிய டிசைனில் வழங்கப்பட உள்ளது. இவற்றுடன், தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள வென்யூ காரினுள் டேஸ்போர்டு கேமரா மற்றும் ஆட்டோ-டிம்மிங் வசதி கொண்ட ரியர்-வியூ மிரர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய 2025 ஹூண்டாய் வென்யூ காரின் வெளிப்பக்கத்தில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பதை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் விவரித்து இருந்ததால், இந்த தொகுப்பில் புதிய வென்யூ காரினுள் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை பார்த்துள்ளோம். இந்தியாவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) கார் பிரிவில் ஹூண்டாய் வென்யூ முக்கியமான மாடலாக உள்ளதால், அதன் புதிய தலைமுறை அப்டேட் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 26, 2025, 23:07 [IST]
English summary
New gen hyundai venue spotted again with dual screen set up and new steering wheel
மேலும்... #hyundai #hyundai venue #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X