வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி முக்காடு போட்டுகிட்டு போனது இந்த கார் மாடலா! புதுசுனு நினைச்சு ஏமாந்திடாதீங்க..
புதிதாக வயசுக்கு வந்த பொண்ணு போல ஓர் கார் முழுமையாக போர்த்தப்பட்ட நிலையில் சாலையில் பயணிக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. கொஞ்சம் கூட அங்கம் தெரியாத வகையில் மறைக்கப்பட்டு அந்த கார் இயக்கப்பட்டதனால் பலரின் கவனத்தை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. அது என்ன கார் மாடலாக இருக்கும் என்பதே தற்போது பலரின் சந்தேகமாக மாறி இருக்கின்றது. பெரும்பாலானோர் இது புதுமுக காராகதான் இருக்கும் என யூகித்திருக்கின்றனர். ஆனால், அது புதுமுக கார் கிடையாது.
இந்தியர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடலே அது ஆகும். அதாவது நாட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கக் கூடிய கார் மாடலே அதுவாகும். சொல்லப்போனால் விற்பனையில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலே அது. அப்படி என்ன கார் மாடல் அது? இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் வென்யூ (Venue)-வும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனே தற்போது முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் இந்திய சாலையில் வலம் வந்திருக்கின்றது. அதாவது, சோதனையோட்டத்திற்கு இந்த கார் உட்படுத்தப்பட்டு இருக்கின்றது.
விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை முன்னிட்டே இந்த பணியினை ஹூண்டாய் நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஹூண்டாய் கார் மாடல்களில் வென்யூ-வும் ஒன்றாகும். இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே தற்போது அதன் புதிய தலைமுறை வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது, ஹூண்டாய் நிறுவனம்.

Source: 91wheels இந்த புதிய தலைமுறை இந்திய சாலையில் வலம் வருவதும், கேமிராவின் கண்களில் சிக்குவதும் இதுவே முதல் முறையாகும். இதன் விளைவாகவே அதன் புகைப்படங்கள் தற்போது இணைய வாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறிப்பாக, கார் ஆர்வலர்கள் மத்தியில் இந்த படங்கள் காட்டு தீயை போல் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு பல்வேறு மாற்றங்களை புதிய தலைமுறை வென்யூவில் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரை எந்தவொரு உறுதியான தகவலும் இந்த கார் பற்றி வெளியாகவில்லை. இருப்பினும், அதன் தோற்றம், அலங்கரிப்பு மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, புதிய கிரெட்டாவில் மேற்கொள்ளப்பட்டதை போல மிகவும் கவர்ச்சியான மாற்றங்களை புதிய தலைமுறை வென்யூ-வில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது. குறிப்பாக, புதிய தோற்றத்திலான கிரில், ஹெட்லேம்ப், பம்பர், அலாய் வீல்கள் உள்ளிட்டவையும் புதிய வென்யூ காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்தவகையில், பரந்த பார்வை திறன் கொண்ட புதிய 360 டிகிரி கேமிரா ஒன்று இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து, புதிய வகை இருக்கைகள், மறு வடிவமைப்புச் செய்யப்பட்ட டேஷ்போர்டு உள்ளிட்டவையும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை. அதே 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் ரக பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகியவையே புதிய தலைமுறை வென்யூவிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வென்யூ காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், நாட்டின் அதிகம் விற்பனைாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக வென்யூ காட்சியளிக்கின்றது. இதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாகவே புதிய தலைமுறை வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ஹூண்டாய் தற்போது இறங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








