நவம்பர் 4இல் அறிமுகமாகும் புது ஹூண்டாய் கார் இப்படித்தான் இருக்கும்! பார்க்க இரு கண்கள் போதல!

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) கார் வருகிற நவம்பர் 4ஆம் தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்களுடன், பிரீமியம் அம்சங்களுடன் இது வரவிருக்கிறது. இந்தியாவில் மக்கள் பலர் வாங்கும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக வென்யூ விளங்குவதால், அதன் புதிய தலைமுறை மாடலுக்கு பெரிதும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

சமீபத்தில், புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ மற்றும் அதன் என் லைன் (N Line) வேரியண்ட்கள் தென்கொரியாவில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டு இருந்தன. அதனை தொடர்ந்து தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய வென்யூ காம்பாக்ட் எஸ்யூவி காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன.

new-gen hyundai venue spotted without any camouflage

இந்தியாவில் பொது இடத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படங்களில் புதிய வென்யூ காரின் முக்கிய வெளிப்புற அம்சங்கள் தெரியவந்துள்ளன. புதிய தலைமுறை வென்யூவின் முன்பக்கத்தில், பெரியதான மற்றும் கவர்ச்சியான கிரில் இடம்பெற்றுள்ளது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் தனித்துவமான வடிவமைப்புடன் வருகிறது. ஷார்ப்பான C-வடிவ LED பகல்நேர விளக்குகள் கிரில்லுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளன,

மேலும், ஹெட்லேம்ப்கள் மறுவடிவமைக்கப்பட்ட ஹவுசிங்கில் வழங்கப்பட்டுள்ளன. பம்பர் தடிமனாகவும், சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐந்து இருக்கைகள் கொண்ட காருக்கு ஒரு திடமான தோற்றத்தை அளிக்கிறது. பக்கவாட்டில், ஹூண்டாய் நுட்பமான டிசைன் மாற்றங்களைச் செய்துள்ளது. புதிய கேரக்டர் லைன்கள் காரின் பக்கவாட்டு முழு நீளத்திற்கும் ஓடுகின்றன.

மேலும், வீல் ஆர்ச்களைச் சுற்றி அடர்த்தியான கிளாடிங் மற்றும் புதிய அலாய் சக்கரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் புதிய இணைக்கப்பட்ட LED டெயில்லைட்கள் மற்றும் பம்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மறுப்பக்கம், புதிய வென்யூ என் லைன் கார் ஸ்போர்ட்டினஸ் அம்சங்களை அதிகமாக கொண்டுள்ளது.

இதன் முன்புறம் மற்றும் பக்கவாட்டு ஸ்கர்ட்களில் சிவப்பு நிற அலங்காரங்கள், பளபளப்பான கருப்பு நிற மேற்கூரை மற்றும் அதனுடன் பொருந்தும் வகையிலான ரூஃப் ரெயில்கள், மேலும் பிரத்யேக டூயல்-டோன் அலாய் சக்கரங்கள் ஆகியவை புதிய வென்யூவில் உள்ளன. புதிய தலைமுறை வென்யூ என் லைன் காரின் பின்புறத்தில் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இயந்திர ரீதியாகவும் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

new-gen hyundai venue spotted without any camouflage

புதிய வென்யூ காரின் உட்புற மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. டேஷ்போர்டு முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு, கிடைமட்டமான லேஅவுட்டுடன், ஒரே கண்ணாடி பேனலின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட இரு 12.3-இன்ச் டிஸ்பிளேக்களைக் கொண்டுள்ளது. மேலும், காருக்குள் கேபினை சுற்றிலும் விளக்குகள், புதிய சென்டர் கன்சோல் வடிவமைப்பு மற்றும் பிரீமியம் தரத்திலான இருக்கை அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றை ஹூண்டாய் சேர்த்துள்ளது.

மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் சக்கரமும் புதியதாக உள்ளது. இவற்றுடன், லெவல்-2 ADAS அம்சங்களின் தொகுப்பும் புதிய வென்யூவில் சேர்க்கப்பட்டுள்ளது. என்ஜின் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், ஹூண்டாய் தனது நிரூபிக்கப்பட்ட மூன்று என்ஜின்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவையாவன, 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் சக்திவாய்ந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் ஆகும்.

இதில் டர்போ என்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் சக்தியையும், 172 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இதனை தற்சமயம் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் பெற முடிகிறது. முற்றிலும் புதிய ஹூண்டாய் வென்யூ காருக்கு வழக்கம்போல் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனட், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, டாடா பன்ச், நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர், ஸ்கோடா கைலாக் மற்றும் கியா சைப்ரஸ் போன்ற கார்கள் போட்டியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் பலர் விரும்பி வாங்கும் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக ஹூண்டாய் வென்யூ உள்ளது. இப்போதும் அதிகமாக விற்பனையாகினாலும், விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக ஹூண்டாய் நிறுவனம் வென்யூ காரை அப்கிரேட் செய்ய உள்ளது. நவம்பர் 4ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருந்தாலும், அறிமுகத்திற்கு முன்னதாக புதிய வென்யூ காரின் முழு தோற்றமும் நம் கண்களுக்கு விருந்தாகி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 23, 2025, 14:53 [IST]
English summary
New gen hyundai venue spotted in india without any camouflage check all details here
மேலும்... #hyundai #hyundai venue #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+