ஊர் ஊரா ஓட்டினு போகும் போதே தெரியும், கார் அறிமுகத்துக்கு தயார் ஆகிடுச்சுனு! இதுக்கு தான் வெயிட்டிங்!

கியா (kia) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்டோஸ் (Seltos) கார் முக்கியமான புதிய தலைமுறை (New Generation) அப்கிரேடை பெற உள்ளது. இந்த நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாக புதிய செல்டோஸ் கார் தொழிற்சாலைக்கு அருகே பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் (Spy Images) 'ரெட்டிட்' (Reddit) இணையத்தள பக்கத்தில் வெளியாகி உள்ளன.

தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் நுழைந்ததும் முதலாவதாக அறிமுகம் செய்த கார், செல்டோஸ் ஆகும். அதன்பின் சிலமுறை செல்டோஸ் காரை கியா நிறுவனம் அப்கிரேட் செய்துள்ளது. ஆனால், அவை யாவும் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்டேட்களாகவே இருந்துள்ளன.

new-gen kia seltos car spy images

இந்த நிலையில், புதிய தலைமுறை செல்டோஸ் காரை அறிமுகம் செய்ய கியா தயாராகி வருகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய செல்டோஸ் காரின் அறிமுகம் வருகிற நவம்பர் மாதத்தில் இருக்கலாம். செல்டோஸ் காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என இரு பக்கங்களும் அப்கிரேட் செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில், புதிய செல்டோஸ் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள கியா நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதொடர்பான படங்களில் கார் பாதி மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளதை காணலாம்.

new-gen kia seltos car spy images

அதாவது, காரின் மேல் பாதி மறைக்கப்படாமல், கீழ் பாதி மட்டுமே மறைக்கப்பட்டு உள்லது. இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய என்னவென்றால், காரின் கருப்பு நிற அலாய் சக்கரங்கள் ஆகும். ஏனெனில், கருப்பு நிறத்தில் சக்கரங்கள் எதுவும் தற்சமயம் செல்டோஸ் காரில் வழங்கப்படுவது இல்லை. கருப்பு நிற அலாய் சக்கரங்கள் செல்டோஸ் போன்ற எஸ்யூவி (SUV) ரக காருக்கு எடுப்பாக இருக்கும்.

ஜியோமெட்ரிக் டிசைனில் புதிய செல்டோஸ் காரின் இந்த அலாய் சக்கரங்கள் உள்ளன. புதிய கியா செல்டோஸ் கார் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, தற்போதைய செல்டோஸ் காரை காட்டிலும் பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார்னிவல் (Carnival) காரை போன்று பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் புதிய செல்டோஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

முன்பக்கத்தில் தட்டையான பொனெட், புதிய டிசைனில் எல்இடி டிஆர்எல் சிக்னெச்சர் விளக்குகள், பெரிய அளவிலான கிரில் மற்றும் ட்யூயல்-டோன் நிறத்தில் பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள் உள்ளிட்டவை புதிய செல்டோஸில் வழங்கப்பட உள்ளன. இந்த சோதனை ஓட்டத்தில் புதிய செல்டோஸ் காரின் மேற்கூரை மறைக்கப்படா விடினும், காரின் மேற்கூரையில் காஸ்மெட்டிக் கம்பிகள், மேற்கூரையை தாங்கி நிற்கும் கருப்பு நிற பில்லர்கள் உள்ளிட்ட புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

இதேபோல், சக்கரங்களுக்கு மேலே தடிமனான வடிவத்திலான வீல் ஆர்ச் கிளாடிங்ஸை எதிர்பார்க்கிறோம். புதிய செல்டோஸ் காருக்கு உள்ளே எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பான காட்சிகள் தற்போதைக்கு நமக்கு கிடைக்கவில்லை என்றாலும், புதிய செல்டோஸின் கேபினுள் டிரினிட்டி பனோராமிக் டிஸ்பிளே உள்பட 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் க்ளைமேட் கண்ட்ரோலுக்கு 5-இன்ச் திரை உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தத்தில், தற்போதைய கியா செல்டோஸ் காரை காட்டிலும், புதிய செல்டோஸ் சாலையில் கம்பீரமாக இயங்குவது போல் தெரிகிறது. குறிப்பாக, காரின் முன்பக்கம் நிமிர்ந்த தோற்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இத்தனை அப்டேட்களை பெற்றுவர உள்ளதால், புதிய செல்டோஸ் கார் இந்திய மார்க்கெட்டில் மேலும் அதிக கஸ்டமர்களை பெறும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 25, 2025, 11:37 [IST]
English summary
New gen kia seltos spotted ahead of launch check all details here
மேலும்... #kia #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+