கொரியாகாரன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டான்! மாருதி, டாடா கதையை முடிச்சு கட்ட போகும் புதிய கார்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). தென் கொரியாவை (South Korea) சேர்ந்த கியா நிறுவனம் இந்தியாவில் (India) விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் இதுதான். இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு கியா செல்டோஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கியா செல்டோஸ் காரின் புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளில் கியா நிறுவனம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அத்துடன் புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரின் சோதனை ஓட்டமும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த சூழலில், புதிய தலைமுறை கியா செல்டோஸ் கார் தற்போது அறிமுகத்திற்கு தயாராகி விட்டது.

புதிய தலைமுறை கியா செல்டோஸ் கார், வரும் டிசம்பர் 10ம் தேதி (December 10) அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, கார்வாலே தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.
புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் ஒன்றும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே சமயம் டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல், ஐஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை (Gear Box Options) எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம். டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் பகுதியில், செங்குத்தான எல்இடி பகல் நேர விளக்குகள், ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்பர்கள், புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.
அத்துடன் புதிய எல்இடி டெயில்லைட்கள், ரீ-டிசைன் செய்யப்பட்ட டெயில்கேட் போன்ற அம்சங்களையும் நாம் எதிர்பார்க்க முடியும். தற்போது விற்பனையில் உள்ள கியா செல்டோஸ் காரில், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் 19 வசதிகள் உடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.
மேலும் 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் ஸோன் முழு ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற வசதிகளையும் தற்போதைய கியா செல்டோஸ் கொண்டுள்ளது.
ஆனால் புதிய தலைமுறை மாடலில் இவற்றுடன் மேலும் பல்வேறு வசதிகள் கூடுதலாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா செல்டோஸ் காரின் ஆரம்ப விலை 10.79 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.81 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ள காரணத்தால், புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரின் விலை சற்று உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரின் வருகை, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), டாடா கர்வ் (Tata Curvv), டாடா சியரா (Tata Sierra) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








